நான் கண்ட நகரம்
அழகான ஒரு நகரம்
அதில் அன்புமிக்க மக்கள்
அங்கு ஜாதி என்பது
ஆண் ஜாதி பெண் ஜாதி
என்ற இரண்டுமே
போட்டி இல்லை
பொறாமை இல்லை
எல்லோரும் சமம் என
நினைக்கும் மக்கள்
ஏழை பணக்கார பேதம் இல்லை
கொள்ளையிடும் மக்கள் இல்லை
கடத்தல்காரர்கள் இல்லை
கற்பழிப்பாளர்கன் இல்லை
சீதனக் கொடுமை இல்லை
எல்லோர் மனதிலும்
சந்தோசக் கோலம்
அந்த நகரத்திலே
நானும் ஒரு
பட்டாம் புச்சிபோல்
சிறகடிக்கும் பறவை
சந்தோச உற்சாகத்தில்
சத்தமிட்டு சிரித்தேன்
அன்புத்தோழி அவள்
என்னைத் தட்டினாள்
கண்விழித்து பார்த்தேன்
நேரமோ இரவு 12 காட்டியது