சுனாமி நினைவுகள்

அறியாத வார்த்தை பலருக்கும்
அரங்கேறிய அந்த நாள் வரை
புரியாத நிகழ்வு பூமியில் நமக்கு
புதிய அனுபவம் நடந்து முடிந்தபின்
ஆழிப் பேரலை அகிலத்தை கண்டிட
அகில உலகையே உலுக்கியது !

கடல்கள் சீறியது கருநாகம் போல
அலைகள் உயர்ந்து உயிர்கள் அமிழ்ந்தது
நினைத்த வழியில் நீரும் பாய்ந்தது
வழிமறித்த மரங்கள் யாவும் சாய்ந்தது
விழி பிதுங்கி நின்றது விஞஞானம்
இயற்கைமுன் செயற்கையானது உலகம் !

கடற்கரைகள் பலவும் நீர் தேக்கங்களாய்
காற்று வாங்கியோர் சரிந்த சடலமாய்
கட்டடங்கள் சில சாய்ந்த மரங்களாய்
கடலோர குடிசைகள் கரைந்த மணலாய்
கட்டுமரங்கள் வெட்டுண்ட உடலாய்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்தவை !

சூழ்ச்சி மிகு சுனாமி சூது வாதில்லா
மனிதர் பலரை கடத்திச் சென்றது
உயிர்களின் உடமைகளை உள்வாங்கி
பயிர்களின் வாழ்வையும் பறித்தது
கலங்கிடச் செய்த கண்ணீர் வடிக்கச்செய்த
நிலைஇனி நினைவிலும் நிகழாமல் இருந்திடவே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Dec-12, 3:56 pm)
பார்வை : 166

மேலே