இதுவா விடுதலை?

தருவிது தழைத்தோங்க
தனி நலன் தவிர்த்து விட்டு
கருவினில் கனியான
சன நாயகமே மருந்தென்று
வரும் பல கட்சிகட்கு
வாசலைத் திறந்து விட்டோம்
வருந்துகிறோம் வெம்பி
வேதனையில் கரைகின்றோம்.

தீட்டிய திட்டமெல்லாம்
திரட்டுப் பாலாகுமென
ஈட்டிடுமே செல்வமென
இறுமாந்து இருந்து விட்டு
மீட்டிடும் வீ்ணையிலே
மிஞ்சுவது நாதமென
வீட்டுக்குளே உறைந்தோம்
வீதிக்கு வந்து விட்டோம்.

அஞ்சாமல் அரசியலில்
வஞ்சப் பெருந்தலைகள்
கஞ்சா குடி போதையிலே
லஞ்சப் புரட்சி செய்ய
மிஞ்சி விட்ட செல்வமெல்லாம்
பஞ்சமும் பட்டினியும்தான்
தஞ்சமென யாரழைப்பொம்
எம்மஞ்சளைக் காக்கவென்று.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (28-Dec-12, 4:37 pm)
பார்வை : 87

மேலே