அழகு
அழகாக இருக்கிறாள் என மணந்தேன்
அழுக்காக இருக்கிறாள் என உணர்ந்தேன்
அழுக்கை நீக்கலாம் உடலில் இருந்தால்
அழுக்கு உள்ளத்தில் இருந்தால் ?
அழகு (உடலழுகு) இனிக்கும் திருமண நாளன்று
அழுக்கு (உள்ளத்தில்) கசக்கும் வாழ்நாள் முழுவதும்
அழகாக இருப்பாய் அன்பு இருந்தால்
அகோரமாய் இருப்பாய் அழுக்குடன் இருந்தால்
அன்பான வாழ்கைக்கு புற அழகு வேண்டாம்
அக அழகு வாழ்கை பயணத்தை இனிதாக்கும்