வா வா என் வசந்தமே 555

உயிரே...

உன் அன்பை பெற
ஏங்கிய என் மனம்...

பெறமுடியவில்லை
உன் அன்பை முழுமையாக...

வலிகொண்ட என் மனதிற்கு
வருவாயா மருந்தாக...

வேதனையில் வாடுகிறது
நெஞ்சம் தினம்...

வாசமில்லா மலர்களை
தேடி கானகத்தில் ஒரு பயணம்...

முடிவில்லா
என் பயணத்திற்கு...

முடிவின் வசந்தமாக
நீ வர வேண்டும்...

என் வாழ்வில்...

வசந்தம் என்னை
தேடி வருமோ...

நாளை
உன் வருகையால்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (28-Dec-12, 5:09 pm)
பார்வை : 158

மேலே