கடல் அலை வந்ததாம்...!!!
நிலாச்சோறு ஊட்டும்
என் அம்மா எங்கே?
என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
பள்ளியில் விடும் என் அப்பா எங்கே?
அண்ணாவிடம் சொல்லி
எனக்கு அடிக்கச் சொல்லும்
என் செல்லத் தங்கச்சி எங்கே?
அடித்துவிட்டு திரும்ப தனக்கு
அடிக்கச் சொல்லும் என் அண்ணன் எங்கே?
நாம் ஒன்றாய் இருந்து
கல்வி பயின்ற ஆலமரம் எங்கே?
பள்ளி முடிய ஒழித்து விளையாடும்
பனந்தோப்பு எங்கே?
என் தலையில் தினமும்
குட்டுவைக்கும் மொட்டை வாத்தி எங்கே?
நாம் கிண்டலடிக்கும் ஓட்டைக் களிசான் போட்ட
பல்லுப்பொடியன் எங்கே?
பாடப்புத்தகத்துள் முறுக்கு வைத்து
ஒழித்து நொறுக்கும் பேனாக் கள்ளன் எங்கே?
என்னோடு ஆறு வயதுவரை
பள்ளியில் ஒன்றாய்ப் படித்த
நண்பர்கள் எங்கே?
எனக்கு இப்ப வயது பதினான்காம்...
இப்பதான் பைத்திய ஆஸ்பத்தியில இருந்து
என்னை விட்டினமாம்....
எனக்கு ஆறு வயதராயிருக்கும்போது
கடல் அலை வந்ததாம்...
அது எல்லாத்தையும்
கடலுக்குள் கொண்டு போய்விட்டதாம்...