16 என்பதாலா?

எந்தன் பள்ளித் தோழியே...!
ஆறு வயதிலிருந்து
வெண்ணாடை அணிந்து
ஒருவர் கரம் ஒருவர் பிடித்து
பள்ளிக்குச் சென்றோம்....
தெரு வீதியெங்கும்
வளையம் உருட்டி விளையாடினோம்...

பட்டாம் பூச்சி பிடித்து
நூலில் கட்டி
பறக்கவிட்டு விளையாடினோம்....
மண்ணில் சோறு கறி சமைத்து
காக்காக்கு வைத்து விளையாடினோம்...
சிறு கடை கட்டி
இனிப்பு விற்று விளையாடினோம்....

பாட்டிக்கு பாக்கு இடித்துக்கொடுத்து
நாமும் கடித்து விளையாடினோம்...
ஒழித்துப்பிடித்து விளையாடி
வீட்டுக் கண்ணாடி உடைத்து
அடிவாங்கியும் விளையாடினோம்...

தென்னங்குரும்பை எடுத்து - அதில்
ஈக்கிட்டு தேர் இழுத்து விளையாடினோம்...
வாழை மடலில்
கொடி எடுத்து
உன் கழுத்தில் நான் கட்டி
கல்யாணம் முடித்து விளையாடினோம்...

இவைகளுக்கெல்லாம் சம்மதித்த
நம் பெற்றோர்.... - இன்று
நாம் பேசிடக் கூட
தடுப்பது ஏன்?

உனக்கு வயது
16 என்பதாலா...?

எழுதியவர் : (29-Dec-12, 8:44 am)
பார்வை : 113

மேலே