தெருப்பாவை (2)
புல்லின் தலைமீது பூத்துச் சிரிக்கின்ற
வெள்ளைப் பனியும் விடைபெறும் காலையில்
இல்லில் உறங்குதியோ இன்னும் இது தகுமா ?
மெல்லிடைச் செவ்வியே ! மெத்தை விட் டேகுவாய்!
கல்லினும் வல்லியர் கள்ளுண்ட போதையில்
சில்லெனும் இரவில் சி ரித்துவந்த பொன்மலரைக்
கிள்ளி எறிந்தகதை கேட்டிலையோ எம்தோழி !
துள்ளி எழுவாயே தூக்கம்விட் (டு+எம்) டெம்பாவாய்!