தெருப்பாவை (1) - டெல்லி பாலியல் கொடுமையினைக்க் கண்டிக்க வாராய் எம்பாவாய் !
மார்கழித் திங்கள் மனையுள் வெண்பனி
ஊர்ந்து வருமே ஊ தைக்காற்றாய் என்றெண்ணி
போர்வையுள் தூங்குதியோ பொற்பாவாய்? கண்திறவாய் !
சீர்நாட்டுச் செய்திகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்கே
ஆர்வமுடன் பத்திரிகை யாம் படித்தோம் ; ஆங்கேயோர்
கார்குழலி கற்பழிந்த கண்ணீரின் காதையினை
சோர்வுடனே சொல்லிவர சோம்பின்றி
யாம் வந்தோம்!
போர்தொடுக்க கூவாயோ பூங்குயிலோ ரெம்பாவாய் !
-0-
தலைநகர் டெல்லியிலே இரவு நடந்த " பேருந்து பாலியல் வன்கொடுமை" பற்றிய ஒரு விழிப்புணர்வுக் கவிதைக் கோர்வை தான் இது ! திருப்பாவை, திருவெம்பாவை செய்யுள் (!) பாணியிலே எழுதப்பட்ட "தெருப்பாவை " - இந்த எண்ணம் வருவதற்கு ஒரு தூண்டு கோல இந்தத் தளத்துத் தனயர் திரு காளியப்பன் எசேக்கியல் ! அவரின் கைமலர்களுக்கு என் நன்றி முத்தங்கள் !