என் செல்வன்
மழலை இவன் விரல் தீண்டும் சுகம் கண்டேன் தென்றலின் தீண்டல் எனக்கு கணம் ஆனது ...
மழலை இவன் மேனியின் மணம் கண்டேன்
மலரின் மணம் மாயம் ஆனது ...
மழலை இவன் பேசும் மொழி கேட்டு
தமிழும் உன்னை மடி சாய்த்து மயங்குமடா ...
நொடி பொழுதில் நீ இசைக்கும் இசையால்
என் இளையராஜாவின் ராஜாங்கம் வென்றவன் நீ ...
நீ சிரிக்கும் அழகை காண வான் மேக போர்வை மூடி
உன்னுடன் விளையடும் அந்த வெண்ணிலவும் ...
எத்தனை இன்பமடா உன்னால் ...
என்னை அப்பா என்று அழைக்கும் நாள் எனால் ...