ஒரே சூரியன் ----
சலிப்போங்க பிள்ளையிடம் கேட்டேன்
தினமும் என்ன செய்வாயென்று?
பல் துலக்குவேன் ,
குளிப்பேன்,
சாப்பிடுவேன்,
பள்ளிக்கு போவேன் ,
வீட்டு பாடம் செய்வேன்,
சாப்பிடுவேன்,
விளையாடுவேன்,
தூங்குவேன்,
மறுபடியும் பல் துலக்குவேன்,,,
ஏனென்று கேட்டேன்
தினமும் சூரியன் வருகிறதென்றாள்
அதனால் என்னவென்றேன்
தினமும் ஒரே சூரியன் - ஒரே மாதிரி வாழ்க்கையும் என்றாள்.
பிரமித்து நின்றேன் - புரியாத சுழற்சியை
சட்டென்று யோசிக்காமல் சொல்லிவிட்டாள்
வாயடைத்து நின்றேன் சூரியன் (நம் வாழ்க்கை) மாறுவதற்கு!!!!!!!!!!!!