ஆக மொத்தம் ....நட்டம் தமிழனுக்குத் தான்...!

ஆக மொத்தம் ....நட்டம் தமிழனுக்குத் தான்...
அத்தியாயம் -1
பெரியார் : ஐயா! தமிழ்தான் உலகின் முதன் மொழி, மூத்த மொழி, தனி மொழி என்று சொல்லிக்கொள்கிறார்களே நாம் எப்படி, இங்க பொழப்பு நடத்துறது?
ஆரியன் : அதை விடுங்கானம்! அவங்க முட்டாப் பசங்க! அதன் அருமை, பெருமையை படிச்சாதான தெரியும், படிக்காமலே செய்துட்டா!
பெரியார் : அதெப்படி முடியும் அவங்க தாய்மொழியை மறப்பாங்களா!
ஆரியன் : யோவ் அசடு! நான் இவ்வளவு காலம் அதை நான் செய்யலையா! இனி நீ பாத்துக்க. பெருமையை கேவலப்படுத்தி பேசு! தொடர்ந்து பொய் பேசு நாளைக்கு அது உன்மையாகிவிடும். ஏற்கெனவே தமிழை நான் நீச பாசைன்னு சொல்றேன், நீ உனக்கு பிடிச்சாப்ல ஏதாவது கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லு. அவங்க மேல உள்ள தன்னம்பிக்கை போச்சுன்னா, பயம் வந்துடும். அப்புறம் தமிழன் செத்த பிணம்தானே. தன்னை தாழ்தவன் என்று நம்புகிறவன் ஆட்சி அதிகாரத்தை கோரமாட்டான் இதான் நடக்கும்.
பெரியார் : பேஷ் பேஷ், நான் வந்து தமிழை காட்டுமிரான்டி மொழி-ன்னு சொல்றேன். அப்படியே திரும்ப திரும்ப சொல்லி மூளயை மழுங்கடிக்கிறேன். ஆங்கிலம்தான் உசந்த்துன்னு சொல்லி எல்லோரையும் ஆங்கிலம் படிடான்னு சொல்றேன். அப்பதானே அவங்கள வெச்சு வேலைவாங்க வசதியாய் இருக்கும். எப்பிடி!
ஆரியன் : ரொம்ப நன்னா இருக்கு. இப்படியே செய், என்னையே மிஞ்சிடுவே போலிருக்கே. —
நன்றி
நண்பருக்கு
என்றாலும்
இவையெல்லாம்
பேசு பொருளாக வந்து விட்டன
தெருவில் வீதியில்...
அனைவரையும் விமர்சிப்போம்
பதில்களை முன் வைப்போம் ...
இந்திய அரசின் வேட்டைக் காடாக
மாறி விட்டதா
தமிழகமும் தமிழர்களும் ..?
தமிழன் என்றால்
அழிக்கப்பட
ஒழிக்கப்பட
வேண்டியவன் என்று
முடிவு எடுத்து விட்டார்கள்
என்று நம்பலாமா..?
சங்கிலிக்கருப்பு