இந்தியாவை குலுக்கிய அவரா... இவர் ..?

இந்தியாவை குலுக்கிய அவரா... இவர் ..?

டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவிக்கு மூளைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவி உயிரிழந்ததற்கு இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர், டெல்லி முதல் அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவி உயிரிழந்ததற்கு, அவரது மூளையில் ஏற்பட்ட வீக்கமே முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை அதிகாரி கூறுகையில், மாணவி மரணத்திற்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பே முக்கிய காரணம். டில்லி மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்து விட்டது என கூறினார்.

டில்லியில் பலாத்காரத்துக்கு உள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணம் அடைந்ததை அடுத்து, புது தில்லி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாக அமர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலியும், பள்ளிச் சிறுமிகள் சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு அமர்ந்திருந்தனர்.

இவையெல்லாம் பத்திரிக்கை செய்திகள்...ஆனால் இந்த இந்தியாவை உலுக்கிய இவரின் புகைப்படம் எந்த இணையதளத்திலும் ஏன் இதுவரை வெளிவரவில்லை..? எனக்கு தெரிந்து எந்த பத்திரிக்கையிலும் இல்லை. ஒருவேளை தமிழகத்தில் உள்ள எந்த மீடியாக்களிலும் இந்த புகைப்படம் வராமல் செய்து இருப்பார்களோ..?

அப்படியென்றால் தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? திராவிட அரசியல் கட்சிகளைப் போலவே...முடிந்த மட்டும் தமிழர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள் என்று கருதலாமா..?

இந்த உன்னதவரின் கண்கள் எப்படி படுகாயம் அடைந்தது..? என்ன நடந்தது என்று அறியாமல் மூடி மறைப்பதில் அனைவரும் ஒன்றுகூடி வேலை செய்து முடித்து விட்டார்கள் என்று நம்பலாம் என்று கூறுகிறார்கள் உண்மையான ஊடகவியலாளர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (29-Dec-12, 9:31 pm)
பார்வை : 204

மேலே