நிலத்தின் பங்கு குறைவாக இறைவன் உருவாக்கினான் ?

பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால் ஐம்பூதங்கள் ஒவ்வொன்றும் முழுமையாகத்தான் உள்ளன. நிலத்தையும், நீரையும் அதன் பரப்பளவை வைத்து அளவீடு செய்யக் கூடியதாக இருப்பதால் விகிதாசாரத்தைக் கொடுக்கின்றோம். இந்த விகிதாசாரம் கூறுவது உண்மையான தகவல் அல்ல. சரியாகக் கூறுவதாயின் இந்தப் பூமியில் நிலம் வாழ் உயிரினங்களுக்கான பகுதி 1/3 ஆகவும் நீர் வாழ் உயிரினங்களுக்கான பகுதி 2/3 எனக் கூற வேண்டும். . நீருக்குக் கீழே நிலம் உண்டு. நீரைத் தாங்கி இருப்பது நிலம். (பல புதிய தீவுகள் நீருக்குள் இருந்து தோன்றியுள்ளன). எனவே நீரின் பரப்பளவிற்கு நிலமும உண்டு. ஆனால் அதை நிலம் வாழ் உயிரினம் பயன் படுத்த முடியாது. அதே போல் நிலத்துக்கு மேலே நீர் உண்டு. நீராவி, முகில், காற்றில் உள்ள ஈரப்பதன் என்பன அவை. இவற்றின் அளவையும் தீர்மானிக்க முடியாது. எனவே பெரிது சிறிது என்பது பொருத்தமற்றது. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றும் சமமாக இருப்பதால் தான் பிரபஞ்ச சமநிலை பேணப்படுகிறது. படைப்பில் ஏற்றத்தாழ்வு, பெரிது சிறிது என்று ஒன்றும் இல்லை.