நீயே சொல்
கண்மணி
தன்னியக்கியின்
கதிர்ப்புச்சக்தியில்
கார் செலுத்திக் கொண்டு
பக்கமாயிருந்து பார்க்கும்
பணக்கார வீட்டு சிறுமி மாதிரி,
கண்ணியக்கியில் கதிர்ப்பு செய்துவிட்டு
விலகி நிற்கிறாய்!
நேரில் பார்த்ததை பார்த்தபடி
எழுத முடியாமல்
தவிக்கிற
பத்திரிகைக்காரன் போல்
நான் பிரேமை மிகுந்தலைகிறேன்!
ஊடக சுதந்திரத்தை
நிலைநாட்டுகிற
கம்யுனிஷ தலைவன்
மாதிரி
கருணை செய்வாயா?