மருத்துவ மாணவியின் மரணம் .

தலைநகரம் முழுவதும் போராட்டம்
பஸ் மறியல்,ரயில் மறியல்,
எங்கும் பாதுகாப்பு வளையம்
எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை !.
மாணவியின் கற்பழிப்பு .

நம் பெருமைக்குரிய பாரதத்தில்
ஒவ்வொரு மணித்துளியும் நிகழும்
சாதாரண நிகழ்வுக்கு
எப்படி ஆச்சரிய பட முடியும் ?.

ஆனால் ஒரு ஆச்சரியம் !..
இந்த ஒன்றிற்கு மட்டும் ஏன்
இவ்வளவு போராட்டம் என்று .

வயிற்றில் வளர்ந்த பாவமறியா சிசுவை கூட
வாள் கொண்டு வெட்டி
எறிந்த சிறப்பு மிக்க ! கேடிகளை கொண்ட நம் பாரதத்தில்
பாவம் செய்வதற்காகவே பாய் பிரண்டுடன்
நள்ளிரவில் சென்ற பாவம் பெண்ணை பேருந்தில்
இருந்து தூக்கியெறிந்த படு பாவிகள் மட்டும்
எப்படி உங்களுக்கு பாவியானார்கள் ?.

இது ஒரு மாணவியின் மரணம் அல்ல.
நம் அரசியல் சாசனத்தில் திருத்த பாடாமலே
இருக்கும் திருந்தாத சட்டங்களின் கோர தாண்டவம் .

தூக்கு தண்டனை கொடூரம் என்பாய் ! .
கல்லெறிந்து கொல்வது காட்டு மிராண்டி சட்டம் என்பாய் !.

ஓராயிரம் உயிரை காக்க
ஒரு பாவியின் உயிரை
கொல்வது பாவம் என்று கூறும்
மனிதாபிமானிகள் ! வாழும் நாட்டிலே
ஒரு மாணவியின் கற்பழிப்பு
எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை.

கொத்து கொத்தாக உயிர்களை கொன்ற
கொடியவர்களுக்கு கூட மூன்றாவது முறை
முதல்வர் பதவி கொடுக்கும் மனிதாபிமானம்
மிக்க மக்களை கொண்ட நம் பாரதத்திலே
ஒரு பெண்ணின் கற்பழிப்புக்காக மட்டும்
இவ்வளவு போராட்டம் எனக்கு ஆச்சரியமே.

எத்தனை நிகழ்வுகள் தினம் தினம்
எதற்கும் வாய் திறக்காத சிங்குகள் கூட
இதற்க்கு மட்டும் எப்படி வாய் திறந்தார்கள் என்பதுவும் எனக்கு ஆச்சரியம் .
ஒரு வேளை இது உங்கள் அருகாமையில் தலை நகரில் நடந்ததாலா ?

ஒவ்வொரு கிராமத்திலும் தினம் தினம் நடக்கிறதே
காமத்தை பற்றி கற்பனை கூட செய்ய தெரியாத சிறுமிகளின்
ஏன் சிசுக்களின் கற்பழிப்புகள் கூட .

கற்பழிப்பு செய்தி இல்லாத ஒரே ஒரு நாளிதழை கொடு
அதுவும் ஒரே ஒரு நாள் மட்டும்
அப்போது ஆச்சரிய படுவேன் மூக்கில் விரல் வைத்து .

ஏதோ வெள்ளை பட்டாடையில்
ஒரு துளி இரத்தம் சிந்தியது போல
எல்லோரும் ஆச்சரிய படுகிறீர்களே.

நம் தேசிய கொடி தினம் தினம் கறைபட்டு
கந்தலாகி வரும் கோரம் உங்களுக்கு தெரியவில்லையா ?

நீங்களோ உங்களை சார்ந்தவர்களோ பாதிக்கும் போது குற்றவாளியை தண்டிக்க போராடுகிறீர்கள்.
மற்றவன் பாதிக்கும் போது மட்டும் குற்றவாளிக்கு கூட கொடுந்தண்டனை கொடுப்பது காட்டு மிராண்டி தனம் என்பீர்.

எப்போது போராடுவீர்கள் ஒட்டு மொத்த இந்தியனுக்காக ? எப்போது சிந்திப்பீர் ஒவ்வொரு மனிதனின் பாதிப்பையும் தன் நிலையில் வைத்து ?.

அப்போது தான் விடியும் நம் ஒட்டு மொத்த இந்தியாவின் விடியல் .




சகோதரத்துவத்துடன்,

முகமது ஷஃரப்

எழுதியவர் : முகமது ஷஃரப் (30-Dec-12, 5:07 pm)
சேர்த்தது : Mohamed Sharaf
பார்வை : 103

மேலே