இனியாவது நிகழ்வுகள் நிற்கட்டும்.
என் இனம்
சில கழுகளின் பிடியில்
சிக்கி கொண்டு
சித்திரவதை அடைந்து
சிதைந்து போவதை கண்டு
சிந்தை எரிகிறது
மலரினும் மென்மையான
மங்கைகளை மனமே இல்லாமல்
மடியவைப்பது ஞாயமாகுமா??
பார்த்து பார்த்து
பாதுகாப்பாய் வளர்ந்த பாவை
பாவிகளின் வெறிபிடித்த செயலினால்
பாழாய் போனாலே
படுகுழியில் வீழ்ந்தாலே
பதபதைக்கிது நெஞ்சம்
பாரினில் நடக்கும்
பயங்கரவாதம் கண்டு
இடுக்கான இடமே
இருட்டான இரவே-அவள்
இருண்ட வாழ்விற்கு காரணமென்றால்
இரவே இனி நீ வரவேண்டாம் , பல
இளங்குயிலின்
இனிமை வாழ்வை கெடுக்க வேண்டாம்
நாய்கள் கூட்டத்தால்
நடக்கும் நிகழ்வுகள் கண்டு
நெஞ்சம் வலி கொண்டு இதற்கொரு
நிரந்தர தீர்வு கிடைக்காத என்று
நிதம் ஏங்குகிறது....
தரித்திரம் பிடித்த
சாக்கடை பன்றிகளின்
சாவினை கொடூரமாக்குங்கள்
இதை பார்த்தாவது
இனியொரு நிகழ்வுகள்
நிற்கட்டும்.
-PRIYA