வசந்தமே வா வா .....

எண்ணத் துளிகள் என்றும் நடந்திட
வண்ண மயில்கள் சுற்றி திரிந்திட
கானக் குயில்கள் ராகம் இசைத்திட
வாசமிகு மலர்கள் பூத்துக் குலுங்கிட
பாசமிகு பந்தங்கள் நாளும் மகிழ்ந்திட
நேசமிகு நண்பர்கள் மேலும் பெற்றிட
எதிரியாய் நினைப்பவரும் வாழ்ந்திட
சோகம் மறைந்து சுகமே நிறைந்திட
கயவர்கள் இல்லா பூமியாய் மாறிட
வறுமை நீங்கி வளமே இருந்திட
பிணிகள் இனி எவருக்கும் வந்திடா
இன்னல்கள் இறந்து இன்பமே பொங்கிட
சாதி மதமில்லா சமுதாயம் உருவாகிட
இயற்கை வளங்கள் மேலும் பெருகிட
இருள் நீங்கி ஒளியுடன் திகழ்ந்திட
சுயநலம் மறைந்து பொதுநலம் மிளிர்ந்திட
இல்லா நிலைமை என்றும் நிலைத்திட
பசுமை நிறைந்த பண்புகளே வாழ்ந்திட
வருகின்ற ஆண்டில் வசந்தமே வா வா !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எழுதியவர் : பழனிகுமார் (31-Dec-12, 7:41 am)
பார்வை : 239

மேலே