தில்லி மாணவி மரணம்
[ மருத்துவ மாணவி மரணம் அடைந்த போது நான் எழுதிய கவிதை - அந்த இளம் மொட்டுக்கு இப்போது மீண்டும் சமர்ப்பணம்
தில்லியில்
மருத்துவ பள்ளியில்
படித்த மாணவி
பாலியியல் கொடுமையால் மரணம்
மரணம் அந்த மொட்டுக்கு அல்ல
இந்திய நாட்டுக்கு
உலக வரை படத்தில்
இந்திய தேசம் மீது
சிதறியது
கருப்பு புள்ளியல்ல
அந்த இளம் குருத்தின்
ரத்தம்
நாட்டை கூட
பெண்பாலால் அழைக்கும்
நல்லவர் நாம்
நம் நாட்டிலா இந்த கொடுமை
நாணி தலைகுனிவோம்
குற்றவாளிக்கு
மரணதண்டனை அளித்தால்
அப்போதும் வால்பிடிக்கும்
மனித உரிமை கூட்டமொன்று
அப்படிவந்தால்
அவர்களுக்கும் கொடுப்போம்
அந்த தண்டனை
சட்டத்தின் சாட்டையால் தான்
இந்த சண்டாளர்களை
திருத்த முடியும்
இத்தகைய நிகழ்வுகள்
இந்தியாவில் இனி
நிகழாமல் தடுக்க முடியும்