கீழே படத்தில் இருக்கும் பெண்ணை யாருக்காவது தெரியுமா?

கீழே படத்தில் இருக்கும் பெண்ணை யாருக்காவது தெரியுமா?
இவர் ஏன் 12 வருடங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கிறார் என்று தெரியுமா?
மணிப்பூரில் அப்பாவி பெண்களை கற்பழிக்கும் இந்திய ராணவத்தையும் அதற்கு துணை போகும் கறுப்பு சட்டத்தையும் நீக்கும்படி கோருகிறார். ஆனால் அவருடைய இந்த நியாயமான கோரிக்கைக்கு மன்மோகன் அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. ஆனால் டில்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதும் 3 பிள்ளைகளின் தந்தையான தான் கோவப்படுவதாக கூறுகிறார்.
அப்படியாயின் மணிப்பூர் பெண்கள் மனிதர்கள் இல்லையா?
பலாத்கார சம்பவம்- 3 பெண்களின் தந்தையான எனக்கும் கோபம்தான்: மன்மோகன் சிங்...!
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பெண்களின் தந்தையான தமக்கும் கோபம் இருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
மூன்று பெண்களின் தந்தையான தனக்கும் கோபம் இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல பல தலைவர்கள் இந்த கற்பழிப்பை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். இவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
ஆதிவாசிப் பெண்களை கற்பழித்து கொலை செய்யும் இந்திய ராணுவத்திற்கு என்ன தண்டனை?
காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் பெண்களை கற்பழிக்கும் இந்திய ராணுவத்திற்கு என்ன தண்டனை?
மணிப்புரில் ராணுவ கற்பழிப்புகளை தடுத்து நிறுத்த கோரி ஒரு பெண் 12 வருடங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கிறாரே.அதற்கு என்ன பதில்? அவர் இதே டில்லியிலும் உண்ணாவிரதம் இருந்தாரே! அப்போது இந்த மன்மோகன்சிங் ஏன் கோபம் கொள்ளவில்லை?
இலங்கையில் அப்பாவி தமிழ் பெண்களை கற்பழித்து கொலை செய்த அமைதிப்படைக்கு என்ன தண்டனை? இந்த கற்பழிப்பு மற்றும் கொலைகளுக்கு காரணமான ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்தால் அது ஏன் தவறு?
கரவெட்டியில் ஒரு குழந்தை பெற்ற பச்சை வயிறு பெண்ணை கதற கதற கற்பழித்த இந்திய ராணுவத்தை அந்த பெண்ணும், பெண்ணுக்கு சிகிச்சை கொடுத்த பிரஞ்சு மருத்துவரும் தகுந்த ஆதாரங்களோடு நீருபித்தும் அந்த கொடியவர்களுக்கு பம்பாய் ராணுவ நீதிமன்றம் வெறும் 6 மாத தண்டனைதானே வழங்கியது.. இப்போது தூக்கு தண்டனை வழங்க வேண்டும் கேட்பவர்கள் அப்போது ஏன் மௌனமாக இருந்தனர்? டில்லி மருத்து கல்லூரி மாணவிதான் பெண் மற்றர்கள் எல்லாம் என்ன பேய்களா?
நன்றி
தோழர் பாலன்
ஒருவேளை இந்திய ராணுவம் கற்பழித்தால் விதி விலக்கு அளித்திருப்பார்களோ ..பாலன் ..? இருக்கலாம் என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சங்கிலிக்கருப்பு