ஆங்கில புத்தாண்டே வருக !

ஆங்கில புத்தாண்டே (2013) வருக
அனைவருக்கும் என் வாழ்த்தை தருக

சாதனை பல நடக்கட்டும் நீ பிறந்து
சரித்திரம் பல படைக்கட்டும் நின்று

கடந்திடும் வருடம் 2012 கவலையோடு
வழி அனுப்பி வாழ்த்திடுவோம் கூடி

முழு மனதோடு வரவேற்போம் 2013 வருடம்
அனுபவிப்போம் ஆங்கில புத்தாண்டை இன்று

தீமையே நடவாது , நன்மையே தினம் வந்து
திக்கெட்டும் சந்தோசம் கொண்டு

வயது கூடும் நல்ல மாற்றம் வாழ்வில்
வாரி அணைப்போம் வளமாக 2013 வருடம்

வா விரைந்து வா ஆங்கில புத்தாண்டே
வளரட்டும் நம் அன்பு உறவுகள் !

ஸ்ரீவை. காதர்

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (31-Dec-12, 10:43 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 160

மேலே