அழைப்பு சொல்வாய்...!

ஒவ்வொரு நாளிலும்
உனக்கான பாதை செதுக்கப்படுகிறது;
ஒவ்வொரு புலாராலும்
உனக்கான செய்தியை கொண்டு வருகிறது;
ஒவ்வொரு இரவும்
உனக்கான சிந்தனையை விரிக்கிறது;
ஒவ்வொரு நொடியும்
உனக்கான பக்கங்களைத் திறந்து வைக்கிறது;
எனக்காக எதுவும் இல்லையென
ஏங்கும் மனமே~!
தூங்கும் உன்னைத் தட்டி எழுப்ப
கோழியும் இங்கே கூவி பாக்குது;
முற்றத்தில் வந்து இரையைக் கொத்தும்
சிட்டுக் குருவியும் சேதி சொல்லுது
காத்துக் கூட
புயலாய் மாறி உன்னை புரட்டி போட்டு பாக்குது;
மண்ணும்.. வானும..
உன்னை
தன்னை வெல்லச் சொல்லுது..
உன் விரியும் சிரிப்பில்
வெற்றி உந்தன் விலாசம் வைக்குது...
புரிந்து நடந்தால்..
பூமி உனக்கு..
புரியாமல் இருந்தால்...
பாவம் ..உன்னை பெற்றவர்கள்...
வருடத்தில் முதல் நாள்
வாழ்த்துச் சொல்வேன் !
வசந்த ருதுக்களுக்கு
அழைப்பு சொல்வாய்...!