மாறாத கதை...
காலைக் கதிரவன் தன்
கதிர்க்கரங்களை நீட்டுமுன்னே
தன்
காதலைச் சொல்லிவிட்டது
காலைப் பனி..
காதலுடன் புன்முறுவல் பூத்தது
காட்டு ரோஜா..
தோல்வியிலும் மலரின்
தோற்றத்தை மிளிரவைக்கிறான்
கதிரவன்..
கதையிது என்றும் மாறாதது-
இயற்கையில்...!