மீனவர் மீதான தாக்குதல் பிரச்சனைக்கு தமிழக அரசு தான் காரணம் - சொல்கிறார் நாராயணசாமி..! ஒரே விஜித்திரமா இருக்குல்ல..!

மீனவர் மீதான தாக்குதல் பிரச்சனைக்கு தமிழக அரசு தான் காரணம் - சொல்கிறார் நாராயணசாமி..! ஒரே விஜித்திரமா இருக்குல்ல..!

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த, மத்திய அரசு அனுப்பிய இரு கடிதங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்று மத்திய இணைஅமைச்சர் வே.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசும் பொழுது, இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் பேசி முடிவுக்கு வந்தால் அதனை மத்திய அரசு அமுல்படுத்த தயாராக உள்ளது. பேச்சு நடத்த இலங்கை மீனவர்களோடு, இலங்கை அரசும் தயாராக உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு இரு கடிதங்கள் அனுப்பியும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை என்றார்.

இவர் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் இரண்டாம் நாளாக இன்று வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள், அதாவது காரைக்கால் மீனவர்கள்.அவர்கள் எதற்காக வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள்..? இரு நாட்டு எல்லைகளிலும் மீன் பிடிப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி 11 மீனவ கிராம மீனவர்கள் தான் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். என்ன போராட்டம் நடத்தினாலும் தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசோ மாநில அரசு ஒன்றும் செய்துவிடப் போவதில்லை எனபது வேறு விசயம், இந்நிலையில்,

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மீனவரணி தலைவர் ரவி இவ்வாறு கூறியுள்ளார் .இலங்கை கடற்பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் அதிக மீன்களும், இந்திய எல்லையில் குறிப்பிட்ட காலத்தில் அதிக மீன்களும் கிடைக்கிறது. இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன் பிடிக்கும் போது இந்திய கடற்படையினரால் அவர்களுக்கு ஒரு தொந்தரவும் கிடையாது. ஆனால் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன் பிடிக்கும் போது மட்டும் அந்நாட்டு கடற்படையினர் அடி, உதை, கைது என அட்டூழியம் செய்கின்றனர். இந்த பிரச்னை தீர இரு நாட்டு எல்லைகளிலும் மீன் பிடித்துக்கொள்ளும் புதிய ஒப்பந்தத்தை இரு நாட்டு அரசுகளும் மேற்கொள்ள வேண்டும், இதற்கு மத்திய மாநில அரசுகள் முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் இவ்வாறு கூறுகிறார் இலங்கை மீனவர்களும் இலங்கை அரசும் தயாராக இருக்கிறதாம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்கிறார்.அதாவது தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு தமிழக அரசுதான் காரணம் மற்றும் முழு பொறுப்பு என்கிறார். தமிழக முதல்வர் யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்தபின் இவ்வாறு கூறுகிறார். மத்தியில் உள்ள ப.ஜா.க., காங்-ஐ.கூட கூட்டணி கிடையாது என்று சொன்னப்பிறகு இவ்வாறு சொல்கிறாரா..? அல்லது தி.மு.க.வின் மு.கருணாநிதி அரசு இருந்தது போல தமிழக மீனவனை அடித்து கொல்வதற்கு துணை செய்ய மறுக்கிறார் என்பதினால் இவ்வாறு கூறுகிறாரா..? தமிழக மக்கள் அனைவரும் மூளை இல்லாமல் பிறந்துள்ளனர் என்று நினைத்து கூறுகிறாரா..?

மந்திரி எப்படியோ, அதுபோலவே வட்டமும் மாவட்டமும்..மாவட்ட காங் ஐ.மீனவர் அணி ரவி, போகிற போக்கில் இலங்கை ராணுவம் புதுச்சேரி மீனவர்களை அடித்து துன்புறுத்துவதாக ஏன் கூறுகிறார் தெரியுமா..? மீனவர் அணி ஒன்றுக்கு தலைவர் என்பதால்..அதெல்லாம் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை அடித்து துவைத்து ஒன்றும் செய்யவில்லை என்று வேறு ஒரு சங்கத்துக்கு தலைவராக இருந்திருந்தால் இவ்வாறு கூறியிருப்பார்.

என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களும் சங் பரிவார் கட்சியினரும் நினைத்து இணைந்து ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மக்கள் கேட்டுக் கொண்டுதானே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்களோ ..?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (2-Jan-13, 3:13 pm)
பார்வை : 141

மேலே