“தமிழ் அமுதூற்றி வளர்ப்போம்”
கால கணக்கீட்டெல்லைக்குள் என்றும டங்கா
கன்னிதமிழ் மலர்பாதம் சென்னி வைப்போம்!
ஆரியதீயில் பலமொழி கருகி யழிந்தொழிய
அங்கங்கருகா சந்தவொலியோடு வந்த தங்கமகளே
ஆங்கில அணுகுண்டு வீச்சில ழியமட்டாய் - நீ
ஆங்கில சங்கறுக்கும் காலம் எப்போ?
சொல்லொலி மாறாவுடல் குறியீட்டை அதிகமாற்றா
பல்தடை தாண்டிய தண்டமிழ் மகளேயுன்
ஒலியுமொளியும் மெருகேறியேறி ஒளிற, வழிதவறி
மொழிமறக்குமோ வருங்கல திராவிடமழலை நா!
தொல்காப்பியன் ஐயிலக்கணயணி போட்டழகு பார்க்க
சொல்லுயர் வள்ளுவனோ குறள்வெண்பா மகுடம்சூட்ட
திருதக்கரும், இளஞ்சோதிஇளங்கோவும் நெற்றி திலகமிட
திருவுயர்கம்பனோ விருத்த பாவடையுடுத்தி மகிழ்ந்தானே!
சிந்துச்சமவெளி மதமன்றோ இந்துமதமாக திரிந்துபோக
இந்துமதமென்னும் ஆற்றுநீர் பெருக்கெடுத் தோட
தமிழ்மொழியென்னும் தெளிந்த அமுதூற்று நீரெடுத்து
தமிழகத்தில் வூற்றிப்பெருக்கினாரே சமய சான்றோர்!
மருத்துவமறியா நடோடிவாழ்வில் இவ்வுலகமக்கள் வாழ
மருந்தும் கருத்தும்தந்த மூத்தகுடி சித்தனோ
சிவன்வேறு சித்தாந்தம் வேறல்லயென்ற வுணர்வை
தமிழ்மொழியென்னும் சிற்பம் கொண்டு வடித்தானோ!
அரைகுறை யுடையுடுத்தி ஆங்கிலப்பள்ளி அறைநிர்வாணமாய்
அழைக்கயதில் விட்டில்பூச்சியாய் மழலைகள் யதில்வீழ
தமிழங்கே தனித்து, தவித்து, சிரித்து நிற்க
தமிழ்தாய்குலமே நின்சிசுவை நீயே கொல்வயோ?
உடல் வுணர்ச்சியின் உச்ச யெச்சதுளிகளே
கடலலையாக நில்லாவரும் நாளை தலமுறையவர்களை
தமிழென்னும் நல்லமுதூற்றி வளர்க்காமல் நீவிர்
ஆங்கிலமென்னும் மதுவூற்றி வளர்ப்பது ஏனோ?