கையேந்தி நிற்கின்றேன்
நான் கண்மூடி கனவு கண்டேன்
உச்சி கோபுரத்தில் நான்
கண் திறந்து பார்க்கும் போது
குப்பை மேட்டில் நிற்கின்றேன்
இதுவரை வறுமை மட்டுமே
என் உறவு
மகிழ்ச்சி எனக்கு விருந்தாளியகக்
கூட வந்ததில்லை
வாழ்க்கை எனும் நாடகத்தில்
எனக்கு பிச்சைகார பாத்திரம்
என் கையில் கூட பாத்திரம்
இதுவரை அதுவும் நிறைந்ததில்லை
என் வயிறும் நிறைந்ததில்லை
வழி மேல் விழி வைத்து காத்திருப்பது
நான் ஒருவன் மட்டும் தான்
யாராவது வருகிறார்களா என்று
எனக்கு பிச்சையிட மாட்டார்களா என்று
இந்த காத்திருப்பில்
கனவுகள் காய்ந்துவிட்டன
புன்னகை பூக்கள் உதிர்ந்துவிட்டன
சோகமும் வறுமையும் மட்டுமே
எனக்கு சொந்தமாகிவிட்டன
எனக்கு வேறு சொந்தமில்லை
இந்த சொந்தங்களுக்காகவே
வாழும் வாழ்க்கை மட்டும்
எனக்கே சொந்தமாகிவிட்டது
எனக்கு விடியலுமில்லை வீழ்ச்சியுமில்லை
நான் வீழும் வரை
விழாமல் இருக்க
இங்கு கையேந்தி நிற்கின்றேன்................