உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதை போட்டி )
மஞ்சள் ரசம் பொழிகின்றான்
பகலவன் -அவன்
விழிக்கும் முன்
விழிகளை விழிகளாய் எண்ணி
ஏரைக் கூட்டி கழனியில்
உழுது மகிழ்ந்து
வியர்வை பால் சிந்தி
விழி விதைகளைப் பரத்தி
வித்துக்களுக்கு நீரைப் பாய்ச்சி
நெத்து முளைத்துக் கிளம்பும்
தாய் பால் பயிர்களாக
உழவனின் உழைப்பு !
உண்ணும் உணவும்
உண்டு மகிழவும்
ஏரைப் பிடித்தக் கரங்களை
ஏக்கத்தோடு கைகளில் ஏந்தி
கண்களில் தொட்டு மகிழ்ந்து
மண்ணின் மைந்தனைத் தொழுவோம் !
உணவு தந்த அருந்தவ
அன்னக் கரங்களைத் தொழுவோம் !
உழவே உலகு !
உழவின்றி உலகம் பிசகு !