வெண்மையின் அரும் புதையல்கள்
வெண்மை
எல்லா நிறங்களையும்
தன் உடலுக்குள்ளே
புதைத்திருக்கிறது !
ஏழு வண்ணங்களை
தன் பிரிவுகளில்
வெண் கதிர் கீற்றுகளோடு
கலந்திருக்கின்றது !
எல்லா நிறங்களும்
கலந்த நிறமே
வெண்மையாகின்றது!
சாந்தத்தின்
இருப்பிடம்தான்
வெண்மை !
சமாதானத்தின்
உயிர் மூச்சாம்
வெண்மை !
ஒளி,நீர் ,ஒலி,நிறம்
வாழ்க்கை ,மகிழ்ச்சி
இன்பம் துன்பம் கலந்ததுதான்
நமக்கு வழிகாட்டும்
வெண்மை உயிர்ப்பு !
இவைகளை எல்லாம்
நாம் என்றும்
அளவிடமுடியாத
அரும் புதையல்கள் !