உனக்காக

உனக்காக காத்திருந்த காலத்தில்
என் கனவுகளின் சுமைகள் ஏராளம்...

நீ என்னை விரும்பாத நேரத்திலும்
நான் உன்னை காணாமல் இருந்ததில்லை

காலங்கள் கடந்தன
என் கடமைகள் தேங்கின
ஆனால் உன்னைப் பற்றிய
என் நினைவலைகள் மட்டும்
என்றும் மாறவேயில்லை

கிடைக்காத பொருளுக்காக
ஏங்கி அழும் பிள்ளை போல்
நான் உன்னை எண்ணித் தவிக்கின்றேன்

உனக்கு தெரியும் நான் உன்னை விரும்புவது
ஏனோ கண்டுகொள்ளவில்லை

எனக்கு தெரியும் நீ என்னை விரும்பவில்லையென்று
ஆனாலும் விட்டுவிடவில்லை

என் உள்ளத்து காதலை
உன் உள்ளத்தில் மலர வைப்பதே என் தீர்மானம்
அதுவரை நான் ஓயப்போவதுமில்லை.

எழுதியவர் : (4-Jan-13, 10:35 pm)
Tanglish : unakaaga
பார்வை : 215

சிறந்த கவிதைகள்

மேலே