உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதை போட்டி )
உழவு உலகத்தின் அச்சாணி
மக்களின் வாழ்வாதாரம்
உலகமே போற்றவேண்டிய உன்னத தொழில்
வறுமை நீக்கி வளம் சேர்க்கும் வழி!
பசித்த எவருக்கும் பசியாற்றும் தொழில்
உழைக்கும் எவருக்கும் உண்மையான தொழில்
ஏர் பிடிக்கும் தோழர்களுக்கு தோள் கொடுக்கும் தொழில் எது வந்தும் நிகரில்லை இது என் குல தொழில்!
வான் நோக்கி பாயும் வல்லமை தேவையில்லை
அண்டங்களை தாண்டும் வித்தைகளும் தேவையில்லை மெய் ஞானத்தை மறக்கடிக்கும்
விஞ்ஞானமும் தேவையில்லை பாரெல்லாம்
பசியாற்றும் உழவுமட்டும் போதுமே !
பசுமைதனை போற்றி பாரெல்லாம் புகழ் பாடுவோம் பூமிதனை குளிர்வித்து அடைமழயினை அழைத்திடுவோம் பட்டினத்தை ஓரம் கட்டி பழமைதனை போற்றுவோம் கல்விளைந்த பூமியை கூட நெல்விளைய மாற்றிடுவோம் !
வந்தாரை வாழவைக்கும் வல்லமை தொழிலை வளமை செய்வோம் , உழவு செய்வோம்
புது உலகம் படைப்போம் இனி உழவின்றி
உலகில்லை என்பதை உறக்க சொல்வோம் !