மரணம்

மரணம்,
எல்லோருக்கும் வரும்-எனக்கும் வரும்
யாரும் தப்பமுடியாது-ஆனால்
என் விருப்பமெல்லாம்
அது எப்படி வரவேண்டும்
நோயாலா-அல்ல
விபத்தாலா-அல்ல
நாற்றமெடுத்தா-அல்ல
சுயநலத்திற்கா-அல்ல
பணம் பதவிக்கா-அல்ல
பின் எப்படி?
அதோ செத்துவிட்டானே-
எப்படி செத்தான் தெரியும்மா
சமுதாயத்திற்கான போராட்டத்திலே உயிர் விட்டான்-
தமிழ் மொழிக்கான போராட்டத்திலே உயிர் விட்டான்-
கொண்ட கொள்கைக்காக-
சார்ந்த இயக்கத்திற்காக-
போராட்டக்களத்திலே உயிர் விட்டான்
அவன் மரணத்தில்தான்
சமுதாயம் இந்த பலனை பெற்றது-
நாடு இப்பயனைப் பெற்றது-என்று
நம் இறுதிப் பயணத்தின்போது
பேசப்படுகின்ற மரணமாக
நம் மரணம் இருக்க வேண்டும்!
அந்த மரணத்தைத்தான் நான் விரும்புகிறேன்,
வரவேற்கிறேன்!

எழுதியவர் : ilango aruna (5-Jan-13, 10:15 am)
சேர்த்தது : Ilango Aruna
பார்வை : 154

மேலே