அம்மா

ஈன்ற தாயின்,
இனிய பிறந்தநாள்!
தாயே உயிரினும் உயர்ந்தவளே
நீயாகவே என் இரு பிள்ளைகளும்
உன்னைப்போலவே குணம் வேண்டும்
என் சுவாசமே என்னை வழிநடத்து
உன் சொல்படி நான் நடந்ததில்லை
பொய் உனக்கு பிடிக்காது-நான்
உன்னிடம் அதிகம் சொன்னது அதுதான்
உழைப்பு அது உன் உருவம்-இன்னும்
என்னிடம் இல்லாதது அதுதான்
நீ சொன்ன சொல்லை நான் கேட்டதில்லை
நீ விரும்பியபடி நான் படிக்கவில்லை
மொத்தத்தில் நீ சொல்லி எதுவும் கேட்கவில்லை
இருந்தும்,
நீ என்னை நேசித்தாய்
எனக்காய் அழுதாய்
எனக்காய் சிரித்தாய்
எனக்காய் எல்லாமானாய்
என் தவறுகளையெல்லாம் மன்னித்தாய்
என்னை கண்டிப்பதில் கூட கனிவைக் காட்டினாய்
நான் கெட்டுவிடக் கூடாதே என்று கவலை பட்டாய்
எல்லாவற்றையும் மீறி-
அத்தனை தவறுகளையும் மீறி எனை வழிநடத்து
எனை செதுக்கிய சிற்பியே!
தினமும் உன்னை நினைக்கிறேன்!
வணங்குகிறேன்!
எனை வழிநடத்து தாயே!!!!

எழுதியவர் : ilango aruna (5-Jan-13, 9:42 am)
Tanglish : amma
பார்வை : 141

மேலே