[396] வில்லாக வளைந்துகொடு வெற்றிகொடுப்பார்!

சொல்லாத வார்த்தைக்குப் பொருள்கொடுப்பார் !
---சோம்பேறி யானவர்க்கும் அருள்கொடுப்பார்!
பொல்லாத செயல்பொறுத்து மறந்திடுவார்!
---புகழாத நாவுகளைத் திறந்திடுவார்!
நில்லாத வாழ்க்கையிலும் நிலைக்க வைப்பார்!
---நினைக்காத செய்து,உனை மலைக்கவைப்பார்!
செல்லாத இடங்களுக்கும் வழிகொடுப்பார்!
---சேரநினை உனக்கு,வரும் பழிதடுப்பார்!
வில்லாக வளைந்துகொடு வெற்றிகொடுப்பார்!
---வேதனைகள் தீர,அவர் ஒற்றிஎடுப்பார்!
கல்லாத பேர்க்கறிவுக் கைகள்கொடுப்பார்!
---கடையனெனை வைத்துனக்குக் கவிதைகொடுத்தார்!
முள்வாங்கி நமக்காக உயிர்கொடுத்தார்!
---முன்வந்து நம்பாவப் பயிரறுத்தார்!
==oo === ===000=== ===000===

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (5-Jan-13, 11:49 am)
பார்வை : 145

மேலே