Nishasaleem - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nishasaleem |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-May-2013 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 9 |
நீர் குமிழ் ஊதினேன்
தெரிந்தது அவள் முகம்
நிறுத்தவில்லை மூச்சை .............
போகட்டும் என் உயிர்
அவள் முகம் பார்த்து கொண்டே....................
வீணையின் நரம்பை மீட்ட விரல்கள் உண்டு ...
விதியின் நரம்பை மீட்ட காலம் உண்டு....
வாடுகின்ற பயிருக்கு நீர் உண்டு..
வாடும் எனக்கு யார் உண்டு?
நீந்தி ஓடும் நிலவுக்கு முகில் உண்டு ...
நீந்தி விளையாடும் மீனுக்கும் நீர் உண்டு ...
நித்தம் தடுமாறும் எனக்கு யார் உண்டு ?
ஆர்ப்பரிக்கும் அலைக்கும் கரை உண்டு...
ஆடி வரும் தென்றலுக்கும் பருவம் உண்டு ...
ஆண்டவனே எனக்கு யார் உண்டு ?
இசைப்பதற்கு ராகம் உண்டு ...
இருப்பவருக்கு யாவும் உண்டு...
இறைவா எனக்கு யார் உண்டு ?
காணும் கண்களுக்கு காட்சி உண்டு ..
கணவனுக்கும் மனைவி உண்டு ..
கடவுளே எனக்கு யார் உண்டு ?
மணக்கும் மலருக்கு மணம் உண்டு...
மாலையில் சாய்ந்தனையோ சந்தனமே...
காலையில் சந்தித்த மனவிழைவின்
மறுபக்கம் மாலையில் சந்திக்கவே...
மலர் மாலையில் சந்திக்கவே....மனமாலையில்
சந்திக்கவே... சோலையில் நானிருந்தேன்....
சோடியே தனியே சாடியதோ - உனை
நாடியதோ... சாவின் சக்கர வாசல் !!!
ஊசலாடும் உயிரிங்கு உரைப்பது
ஓர் வந்தனமே என் சந்தனதிற்கு......
அமைதிகாலத்தின் வியர்வைப்பொழுது..
வெறுப்புகளின் தாக்கம்
மொத்தமாய் சிதைத்துக்கொண்டிருந்த
நேரம் அது..
பார்வைகள் நிகழ்காலத்தை சுற்றினாலும்,
மனமோ
அறியா விதி நினைத்து
அதிகம் நொந்துகொண்டிருந்தது.,
அவள்
வருகையின் முன்வரை...
அவளை பரிவுடன் பல
கண்கள் காணலாம்
ஆனால், எனக்கோ
அவள் ஒரு தனி ராஜாங்கமாகவே காட்சியளித்தாள்.
அவள் அசைவுகள் அழகு
அவள் பொறுமை அழகு
அவள் தலைசாய்த்தல் அழகு
அவள் மென்தீண்டல் அழகு
அவளை நான் தீண்டவில்லை,
அவளால் தீண்டப்பட்டதே சொல்கிறது.,
ஆம்
அவள் தீண்டலில் உயிர்பெற்ற கைபேசியின் காதல் கதை இது…..
“ யார் இவள்?
மென்தீண்டல் தருகிறாள்;
உயிரற்ற என்னையும
வலையில் சிக்கி மீன்
சாவது உனக்காக....
அலையில் சிக்கி நீ
சாகிறாய் எதற்காக........
வாழும் உன்
பிள்ளை நோகுதடா....
வாழாமல் உன்
மனைவி சாகுதடா....
புயலாய் புறப்பட்டு
செல்லாதே
புயலில் சிக்கி நீ
மடியாதே...
வாழ்கை பயணம்
பெரியதடா
நங்கூரம் பாய்ச்சி
அதை நிறுத்தாதே.....
தந்திரமாய் யோசித்து
செல்வாயடா
சுதந்திரமாய் நீ
வாழ்ந்து கொள்வாயடா........