அனாதை

வீணையின் நரம்பை மீட்ட விரல்கள் உண்டு ...
விதியின் நரம்பை மீட்ட காலம் உண்டு....
வாடுகின்ற பயிருக்கு நீர் உண்டு..
வாடும் எனக்கு யார் உண்டு?

நீந்தி ஓடும் நிலவுக்கு முகில் உண்டு ...
நீந்தி விளையாடும் மீனுக்கும் நீர் உண்டு ...
நித்தம் தடுமாறும் எனக்கு யார் உண்டு ?

ஆர்ப்பரிக்கும் அலைக்கும் கரை உண்டு...
ஆடி வரும் தென்றலுக்கும் பருவம் உண்டு ...
ஆண்டவனே எனக்கு யார் உண்டு ?

இசைப்பதற்கு ராகம் உண்டு ...
இருப்பவருக்கு யாவும் உண்டு...
இறைவா எனக்கு யார் உண்டு ?

காணும் கண்களுக்கு காட்சி உண்டு ..
கணவனுக்கும் மனைவி உண்டு ..
கடவுளே எனக்கு யார் உண்டு ?

மணக்கும் மலருக்கு மணம் உண்டு...
மயக்கும் மங்கைக்கு அழகு உண்டு ..
மதி மயங்கும் எனக்கு யார் உண்டு ?

உடலுக்கு உயிர் உண்டு ...
உயிருக்கு பிறப்பு உண்டு...என்
உறவுக்கு யார் உண்டு ? (சொல்வாய்)

எழுதியவர் : அ.நபிகான் (4-Nov-17, 3:57 pm)
Tanglish : anaadhai
பார்வை : 136

மேலே