vinothiniselven - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vinothiniselven |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 21-May-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 270 |
புள்ளி | : 43 |
அழகிய தமிழில் கவிதை எழுத மிகவும் பிடிக்கும் .
உணர்வில்லா உருண்டை
ஒலியினால் உணர்வினை பகிர்கிறது
பகிரும் உணவிலும் கண்கலர் புன்னகை
புதியதோர் உயிர் ஒன்று
புன்னகையுடன் விளையாடவும் கொடுக்கும்
ஒலி ......
பெண்ணின் வெட்கத்திலும் ஒலிக்கும்
வளையல் ........
வருவாயின் பின்பு வாழ்கை
சென்றால் அனைவரின் வாயிலும்
புகழ் பாட பெறுவாய் ...
ஆனால் பிறர் கஷ்டத்திலும்
உதவினால் நீ
கடவுளின் வாயிலில் முதல்வாய்
திலகுவாய் மனிதா.......
இடப்புறம் வலப்புறம்
என வாழ்க்கையின் சுழல்
திரும்பினாலும்......
உன் புறம் ஒன்றே
என் நிழல் கூட திரும்புதடா....
கண் இமைகள் போடும் தள்ளாட்டத்தில்
இரவும் பகலும் நொடி பொழுதில்
மாறினாலும் .....
என்றும் என்னுள் இருக்கும்
அழியாத சூரியன் நீ ......
என்னவனே ........
வலிகள் பின்பு வந்த
வரம் அந்த அன்பு
நினைவே இல்லனாலும் உணரும் உணர்வின்
தெளிவு அது
உன் உதடுகள் சொல்லும் உணர்வை
உன் முன் சொல்லும் இதயம் அது
அவளுக்காக துடிக்காமல் உனக்காக
துடிக்கிறது அவளே தாயாகிறாள் ....
உன் வாழ்வின் வண்ணங்களை தீட்டு
தீட்டும் வண்ணங்களுக்கு உயிர் குடு
உன் உயிரின் வண்ணங்கள் தென்படும் போது
உன் உதடுகள் உதிர்க்கும் புன்சிரிப்புகளுக்கு
உலகின் அதிசயங்களுகளும் ஈடாகாது .....
விடியலின் தேடலில்
உன் முகம் புதைக்காதே
உன் மனம் புதைத்து பார்
உன் அறிவின் ஒளியில்
பாதைகள் ரசிக்க கற்றுக்கொள்வாய்
தேடல் புதிதாகும் ......
எந்த மதமும்
பேசுவதில்லை
மற்ற மதம் பற்றி..
பேசுவதென்னவோ
மதவாதிகள்தான்..
அவர்கள்
மதவாதி மட்டுமல்ல
மத வியாதியும் தான்..
..- பா. மாறன்
உனை பார்த்த நொடி முதல்
இதயம் என்னிடம் சொல்லியது
நான்உனக்கு சொந்தமானது இல்ல
உன்னவனுக்கு சொந்த மாகிவிட்டேன் என்று ...
விழிகள் வழியும் கண்ணீருக்கு
மட்டுமே தெரியும்
உன் வாழ்வின் மாற்றங்கள் ,
நிழல் என்று எவரையும் நினைக்காதே
சந்திரன் உதித்த பின்
வரும் கருமை போல் மறைந்துவிடும் ,
உன்னை நம்பி முன்னேறு
உன் வியர்வைத்துளிகளில் தடைகளும் உருகி போகும்
முன்னேறு தமிழா முன்னேறு .....
சுட்டெரிக்கும் செந்நிற சூரியனின் கதிர்கள்
கவலையின் நினைவுகள் போல்
என்னை வாட்டும் போது ,
உணர்கிறேன் சந்திரனின் குளிரை
உன் மார்பில் முகம் புதைக்கும் போது
விடியலின் அழகும் ,
நெற்றியில் உன் உதடுகள் விடும் கோலத்தில்
பிறைநிலா போல் உணர்கிறேன்
உன் விழிகளில் வழியும் அன்பில்
பகலிலும் சந்திரனை காண்கிறேன்,
என்னவனே .......உன் அருகில்
எனை மறந்தேன்.....
எனை ஈர்த்த சந்திரனின் அழகை போல் .......
உனை ரசிக்க..........
விடியும் வரை காத்திரு விடியலுக்காக
விடிந்த பின்பும் காத்திரு உன் வாழ்வின்
வெற்றிக்காக ..............
வெற்றியின் பின்பு செல்லாதே
உன் விழிகள் தேடும் பாதைகள்
மனம் சொல்லும் பாதையில் செல்
நிம்மதிக்காக ..............