எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும்
கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது
அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்...
அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது..
உண்மையான எதார்த்தமான படைப்பு...
வாழ்த்துக்கள் நண்பரே
பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐
அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
இன்று ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இத்தளத்தில் நான் இணைந்த ஆரம்பத்தில் அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த 'மனம் பறி போனது' எனும் தலைப்பிலான கவிதை இன்றைய வாரமஞ்சரி பத்திரிகையில் 'விட்டுச் சென்ற அவள்' என்ற தலைப்பு மாற்றத்தின் கீழ் என்னுடைய கவிதை 'கஜபா தஸ்கீன்' என்ற முகமறியா ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தது. இதனை நான் எப்படி எடுத்துக் கொள்வது தோழர்களே! நீங்களே சொல்லுங்கள். கண்கள் விழித்து எழுதுபவன் ஒருத்தன் நோகாமல் சொந்தம் கொள்ள பல பட்டாளங்கள் எமக்கு பின்னால் உலவுகிறது. எழுதுபவனுக்கு அவனது எழுத்துக்கள் உரிமையில்லாத காப்புரிமை இத்தளத்தில் இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது. இது பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன சொல்லுங்கள் ஆராய்வோம்.
அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக் கொள்வதை தவிர வேறொன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி தோணுகிறது. வாழ்க்கையில் எண்ணற்ற அனுபவங்கள் அதை உணரும் போது கசப்பதும் போகப் போக இனிக்கத்தான் செய்கின்றது 31-Aug-2017 12:35 am
மிகவும் வேதனைக்குரியதுதான்...நேற்று எனக்கு அறியத்தந்த பத்திரிகையிலா...?படைப்புகளைதான் ஒருவரால் திருட முடியுமே தவிர தங்கள் திறமையை யாராலும் திருட முடியாது...இதே தளத்திலியே என் கவிதையொன்று இன்னொருவர் பெயரில் பதிவாகியிருந்தது...அறிந்தும் அறியாமலும் என் பல படைப்புகள் இன்னொருவரின் பெயரில் இருக்கும்...முதலில் அவற்றை பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது...ஆனால் இப்போது அவை எனக்கு பெரிதாகத் தெரிவதில்லை...திருடுபவர்கள் திருடிக் கொண்டேயிருக்கட்டும்...தங்கள் எழுதுகுழல் வழியே இன்னும் பல படைப்புகளை இவ் உலகிற்கு அறிமுகம் செய்து கொண்டே இருங்கள்...உங்கள் திறமைக்கான அங்கீகாரம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது...அதை இன்னொருவரால் என்றுமே பறித்துக் கொள்ள முடியாது...தொடர்ந்தும் எழுதுங்கள்...உங்கள் படைப்புகள் என்றுமே தனித்துவமானவை...வாழ்த்துகள் ஸர்பான்.. 30-Aug-2017 8:41 pm
அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்ன செய்வது என்று தெரியவில்லை இது போல் பலரின் படைப்புக்கள் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் முகமூடி அணிந்து உலாவிக் கொண்டு தான் இருக்கிறது. அடுத்த படைப்பை அனுப்பும் போது இதையும் சொல்லி அனுப்புகிறேன். பிறகு அவர்களே ஒரு தீர்மானத்தை எடுக்கட்டும் . 30-Aug-2017 1:23 pm
நாம் இல்லாதபோதும் நம் பேரைச் சொல்லத்தான் படைக்கிறோம்.. உலவ விடுகிறோம்..! இதைத் திருடினால் மனது கபகபவென்று எரிகிறது. வார மஞ்சரி ஆசிரியரை முதலில் தொடர்பு கொள்ளுங்கள்..
இப்படியெல்லாம் நடப்பதால்தான் சில சமயம் எழுதியதை தளத்தில் வெளியிட வேண்டுமா என்று கூடத் தோன்றுகிறது..! ! ! 30-Aug-2017 11:10 am