பொங்கல்
வாயோடு ஓடும் சிறு எச்சில் நீரும்
கையோடும் கொஞ்சம் வழிந்தோடும்
நெயோடு அம்மா நீ பொங்கிய
பொங்கல் உண்கையில்...
சாரோடு உண்ட கண்டைக் கரும்பும்
தாயோடு களித்தப் பண்டிகை நல்நாளும்
கண்ணோடு வந்து கவிதைப் பாடும்
பொங்கல் வருகையில்...
****
ஏரையும் கண்டதில்லை
விவசாயம் பக்கம் சென்றதுமில்லை
ஆயினும் உரைப்போம் அவர்களுடன்
எங்கள் நன்றியை பொங்கல் திருநாளில்...
***
பட்டிணத்துப் பொங்கல் கண்டு வளர்த்தோம்
மொட்டை மாடியில் சூரியப் பொங்கல்
பொங்கும் போது
பொங்கலோ பொங்கலோ என
சத்தமிட தயங்கினோம் சிறுப்பிள்ளையில்...
இன்றோ பரதேசம் வந்தப்பின்
பொங்கலோ பொங்கலோ என
சத்தமிட்டோம் எங்கள் வீட்டுகுள்ளே...
**
வார இறுதியே எங்கள் கொண்டாட்டம்
மற்ற நாட்களெல்லாம் திண்டாட்டம்
கூடுவோம் பொங்கலுக்கு ஒன்றாக
குதுகுலம் கொள்ளுவோம் நன்றாக...
- செல்வா
13-Jan-2016 10:59 pm
பொங்கல்
வாயோடு ஓடும் சிறு எச்சில் நீரும்
கையோடும் கொஞ்சம் வழிந்தோடும்
நெயோடு அம்மா நீ பொங்கிய
பொங்கல் உண்கையில்...
சாரோடு உண்ட கண்டைக் கரும்பும்
தாயோடு களித்தப் பண்டிகை நல்நாளும்
கண்ணோடு வந்து கவிதைப் பாடும்
பொங்கல் வருகையில்...
****
ஏரையும் கண்டதில்லை
விவசாயம் பக்கம் சென்றதுமில்லை
ஆயினும் உரைப்போம் அவர்களுடன்
எங்கள் நன்றியை பொங்கல் திருநாளில்...
***
பட்டிணத்துப் பொங்கல் கண்டு வளர்த்தோம்
மொட்டை மாடியில் சூரியப் பொங்கல்
பொங்கும் போது
பொங்கலோ பொங்கலோ என
சத்தமிட தயங்கினோம் சிறுப்பிள்ளையில்...
இன்றோ பரதேசம் வந்தப்பின்
பொங்கலோ பொங்கலோ என
சத்தமிட்டோம் எங்கள் வீட்டுகுள்ளே...
**
வார இறுதியே எங்கள் கொண்டாட்டம்
மற்ற நாட்களெல்லாம் திண்டாட்டம்
கூடுவோம் பொங்கலுக்கு ஒன்றாக
குதுகுலம் கொள்ளுவோம் நன்றாக...
- செல்வா
13-Jan-2016 10:59 pm