கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  07-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2016
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  7

என்னைப் பற்றி...



என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 12:49 pm

ஒரு தருணத்தில் உன்னையே வெறுத்தேன்,
நீ ஏற்படுத்திய காதலுக்கு நீயே
தகுதியில்லை என்பதால்.

மேலும்

கார்த்திக் - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2015 1:11 am

எனது இரவுகளின் நீட்சிகளுக்கு
நீயே காரணம் ஆகிறாய்..

நிமிடங்களின் நேரத்தை நீட்டிக்கும் நீ..
மறந்தும் என் ஆயுளை நீட்டித்து விடாதே..

அதற்கான அவசியத்தை
நீ எப்போதோ அழித்து விட்டாய்! ..

காலத்திற்கே கெடு வைப்பவள்
நீ மட்டும்தான் !



ஒரே நேரத்தில் மலராகவும்
இதயம் கீறும் முள்ளாகவும்

உன்னால் மட்டுமே மாறி விட முடிகிறது....
மலராக இருக்கும் போது கூட
அமிலத்தை அல்லவா தேனுக்கு பதில் வைத்திருக்கிறாய்..!
அதனால் அமில மலர் என்றே நீ அறியப் படுகிறாய் !

******

என்னை இழந்தேன் உன்னிடத்தில்..அது நினைவில்லையோ..நிஜமில்லையோ..

உன்னை நினைத்தே தவமிருந்தேன்..உயிர் போகின்ற வரத்தை ஏன்

மேலும்

தங்களது மனமுவந்த இக்கருத்திற்கு மிக்க நன்றியும் வணக்கங்களும்..நண்பரே.! 28-Jan-2016 2:00 pm
மன்னிக்கவும் .தகவல் அறிவிப்பில் க்ளிக் செய்யும் போது சில தெரியாமலே போய் விடுவதால் உடனே கருத்திட முடியவில்லை. தங்களது கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழமையே! 28-Jan-2016 2:00 pm
தளத்தில் விதைகளை விதைதுள்ளீர். ஒவ்வொன்றும் புளியமரத்தின் விதைகள், நீண்ட காலம் வலுக்கும். கவிதையின் இயற்கை சோகமானாலும், அளிப்பதோ சுகம். 28-Jan-2016 11:51 am
உன் காதல் சாரலில் தகிக்கும் நோய் கேட்டேன்.. பெருமழை பேரிடராய் மாறி.. ஒரு.. மரித்துப்போன புன்னகையை நிவாரணப் பொட்டலமாய் வீசி விட்டு போகிறாய்.. அதில் கூட உன் படத்தை .. எதற்காக நீ ஒட்டி இருக்கிறாய்.! ****** இந்த வரிகளில் உள்ளம் கொள்ளை போகிறது. வாழ்த்துக்கள் சார் ! 18-Jan-2016 2:09 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2016 11:13 am

ஒரு தருணத்தில் உன்னையே வெறுத்தேன்,
நீ ஏற்படுத்திய காதலுக்கு
நீயே தகுதியில்லை என்பதால்.

மேலும்

சோகம் என்றாலும் காதல் சுகம் 28-Jan-2016 11:36 am
கார்த்திக் - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Jan-2016 10:56 am

நண்பர்களை சம்பாதிப்பது எப்படி?

மேலும்

ஒரு நல்ல நண்பனை சம்பாதிப்பது என்பது ஒரு நாளில் நிகழக் கூடிய காரியமல்ல.தென்னை மரம் வளர்ப்பது போல் பொறுமையாக, சிரத்தையுடன் நெடுநாள் செய்ய வேண்டிய காரியம். 'நண்பர்களை' என்று பன்மையும் வரும்போது அது இன்னும் சவாலான காரியம். எந்த வயதிலும் எந்த இடத்திலும் நண்பர்களை சம்பாதிக்க முயலலாம். சிறு வயதில் நண்பர்களை சம்பாதிக்கவில்லை என்றால் வயதானதும் முடியாது என்று அர்த்தமில்லை. இருந்தாலும் இளமைப் பருவமே, நண்பர்களை சம்பாதிக்க ஆரம்பிக்க சிறந்த பருவம். இளமைப் பருவத்தில் சம்பாதித்த நண்பர்கள் உண்மையான நண்பர்களாக மட்டும் இருந்து விட்டால், பின் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி வந்து ஆதரவு தருவார்கள்.எந்த ஊர் இணையத்தில் இருந்தும் பார்க்கக் கூடிய மின் அஞ்சல் கடிதம் போன்றவர்கள் அவர்கள்! மின் அஞ்சலிலும் நம்மை தொடர்பு கொள்வார்கள். அவர்கள் நீண்ட கால நண்பர்களாக இருப்பார்கள். இளமை பருவத்தில் நண்பர்களை சம்பாதிக்காவிட்டாலும் பாதகமில்லை. அந்தந்த வயதில் நாம் இருக்கும் இடத்துக்கும் செய்யும் தொழிலுக்கும் படிக்கும் படிப்புக்கும், மேற்கொள்ளும் பொழுதுபோக்கு அல்லது சமூக சேவைக்கும் தகுந்தாற்போல் நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். நிறைய நண்பர்களை சம்பாதிக்கலாம். எப்படி? 1. அடுத்த வீட்டுக்காரரோ,கூட வேலை செய்பவரோ, தனக்கு உதவி தேவைப் படுகிறது என்பதை நமக்கு தெரியப் படுத்தி விட்டால், அது நம்மால் செய்யக் கூடிய உதவியாய் இருந்தால் மிக விரைவாக செய்ய துவங்கி விட வேண்டும். நம் உதவியை விரும்புகிறாரா என்பதையும் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில் ஒருவர் அனுமதியின்றி அவர் எல்லைக்குள் நுழைந்து உதவி செய்யக் கூடாது.உதவிவேண்டாதபோது,செய்வதும் எதிர்பார்க்கும்போது நம்மால் முடிந்தாலும் செய்யாமல் இருப்பதும் நல்ல நட்பை வளர்க்காது. 2.ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நம் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க வேண்டும். திரும்ப திரும்ப அவர் உதவி செய்வாரேயானால், "உங்களுக்கு எப்போது என்ன உதவி தேவைப் பட்டாலும் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்" என்று அடிக்கடி கூறி அவரை உற்சாகப் படுத்த வேண்டும். எப்போதாவது சோகமாக அவர் இருப்பது போல் தோன்றினால், " தங்கள் முகம் வாடி இருக்கிறதே! ஏதாவது பிரச்னையா? என்னிடம் சொல்லலாமா? நான் ஏதாவது உதவலாமா?" என்று அன்போடு கேட்க வேண்டும். 3. நம்முடன் பழகுபவர் எந்த சப்ஜெக்டை பற்றி ஆவலாக பேசுகிறாரோ, அதை நாமும் அவர் பேசும்போது ஆர்வமாக கேட்க வேண்டும். அவர் பேசிக் கொண்டிருக்கும்போது நடுநடுவில் நாமும் அது பற்றி சந்தேகங்களோ கேள்விகளோ ஆர்வமாக கேட்க வேண்டும். அது நம்மை பற்றி அவர் மனதில் நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும். முடிந்தால் அவர் பிறந்த நாள் அன்று அவருக்கு பிடித்த சப்ஜெக்டில் ஒரு நல்ல நூலை வாங்கி கொடுக்கலாம். 4. நம்முடன் வேலை பார்ப்பவரிடமோ ,அல்லது அடுத்த வீட்டுக் காரராக, தெரிந்தவராக பழகுபவரிடம், கருத்து வேற்றுமைகள், மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அப்போது வெப்பமான வாதங்களில் இறங்காமல், மென்மையான,இனிமையான சொற்களால், நமது நியாயத்தை எடுத்து சொல்ல வேண்டும்; நம்மிடமே தவறு இருக்கலாம்; நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்.எனவே அடுத்தவர் பேசுவதை பொறுமையாக கவனிக்க வேண்டும். நம்மிடம் தவறு இருந்தால் ஒப்புக் கொண்டு நம் செயலை மாற்றிக் கொள்ள வேண்டும். பேசுவதை விட முக்கியமானது கவனிப்பது என்னும் உண்மை இன்று பலருக்கு தெரிவதில்லை. "மனதினை திறந்து நியாயத்தை பேசு! வழக்குகள் முடிவாகும்; இருக்கின்ற பகையை வளர்த்திடத் தானே வாதங்கள் துணையாகும்!" என்ற திரைப் படப் பாடலை மறக்க வேண்டாம். "How to win friends and influence people?" என்னும் Dale Garneji என்பவர் எழுதிய ஆங்கில நூலை அவசியம் படியுங்கள். அது நல்ல நட்புக்கு பல வழிகளை கூறுகிறது. 07-Feb-2016 11:08 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2016 3:14 pm

ரசிபதரக்கு இத்தனை பேர் இருந்தும்
ஏன் தான் இந்த நிலா - இப்படி
தனிமையில் உள்ளதோ!

மேலும்

எழுத்துப்பிழைகள் சரி பார்க்கவும் !! ரசிப்பதற்கு இத்தனை பேர் இருந்தும் ஏன் இந்த நிலா இப்படி காய்கின்றதோ தனிமையில் ....... 20-Jan-2016 4:16 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2016 4:53 pm

சிறுவயதில் பட்டாம்பூச்சி பிடித்த சந்தோஷம்
உன் அழகு முகம் எனக்கு அளித்தது
நான் முட்டாள் என்றாலும் சரி எனக்கு ஒரு முத்தம் வேண்டும்
உன் மலரிதழ்களால்
நான் பட்டாம்பூச்சி போன்று பறந்து விடுவேன்
முன்வெய்யில் தென்றல் காற்றோடு சேர்ந்து

இறைவன் என்னை அப்படியே மரணிக்க வைத்துவிட வேண்டும்
நான் சொர்கத்தையே அடைவேன் !

மேலும்

கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2016 3:35 pm

சோர்ந்து போனாலும்
சக்தியோடு மீண்டும் வருகிறான் - என்னை
மீண்டும் சோர்வடைய செய்ய!

மேலும்

சோர்ந்து போனாலும் சக்தியோடு மீண்டும் வருகிறான் - எனைச்சேர்ந்து மீண்டும் சோர்வடைய செய்ய! 20-Jan-2016 4:30 pm
நன்றி 20-Jan-2016 4:10 pm
ரசனை ...... ரசனை சுமந்திட்ட வரிகள் ... 20-Jan-2016 3:49 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே