செல்வமீன - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செல்வமீன |
இடம் | : Rajapalayam |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 1 |
நம்மை கேட்காமலேயே நம்
இதய வீட்டில் குடியேறிவிடும் --
நண்பர்கள் !
எளிதில் போக மாட்டார்கள்
போகும்போது வீட்டையே
நொறுக்கிவிடுவார்கள் !!
ullagil nee yaraga irundhalum yaroo oruvaruku neyee ullagamai irupai
தோள் மீது கை போட்டுக் கொண்டே
எங்கும் உடன் வரும்
நண்பன் ஒருவன் ..பள்ளிப் பருவத்தில்..!
பதின் வயதில் வந்த
முதிர்ச்சியில்லா இனக்கவர்ச்சியை
அசை போட துணையாய் ஒரு நண்பன்..!
வாழ்க்கையின் வாசற்படியில்
நிஜங்களின் சூடு பட்ட நேரங்களில்
ஆற்றி மருந்திட ஒரு நண்பன்..
வெற்றிகளைக் கொண்டாடவும்
சோர்ந்திடும் நேரங்களிலும்
சாய்வதற்கு தோளாக ஒரு நண்பன்..!
முதுமையில் பழையன பற்றி
பேசவும்..நினைவுகள் கூட்டவும்
இசைந்து போகும் ஒரு நண்பன்!
வாழ்வின் எல்லா நேரங்களிலும்
எவனாவது ஒருவன் உற்ற நண்பன்..
எல்லாம் முடிந்து மீளா உறக்கத்தில்
ஆழ்ந்தபின் வந்து வழியனுப்ப
நினைவுகளையும் நண்பனையும்
நீ
என்னுள்
ஏற்படுத்திய
உணர்வுகளைக்
கூட்டிக் கழித்து
பெருக்கி
வகுத்துப் பார்த்தேன்,
" நட்பு " எனும்
விடை வந்தது !
பேருந்துப்
பயணத்தில்
உன் தோளில்
தலை சாய்த்துக்
கொள்ளும்போதெல்லாம்
கேட்கத் தொடங்குகிறது
நட்பின் தாலாட்டு !
காற்றுவாக்கில்
நானும்
உள்ளிழுக்க நேரும்
என்ற
ஒரு காரணத்துக்காகவே
பல வருடங்களாகப்
புகைத்துக் கொண்டிருந்த
சிகரெட்டை
நிரந்தரமாகப்
பகைத்துக் கொண்டவன்
நீ !
பேச்சு சுவாரசியத்தில்
நான் கவனிக்க மறந்த
என் துப்பட்டாவை
சரி செய்துகொள்ளும்படி நீ
சைகையால் உணர்த்தியதில்
காப்பாற்றப்பட்டது
என் மானம் மட்டுமல்ல
நம் நட்பின்
கண்ணியமும் தான் !