vasanthanselvam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vasanthanselvam
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  23-Apr-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  5

என் படைப்புகள்
vasanthanselvam செய்திகள்
vasanthanselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 5:20 pm

வேலைக்கு போன மக
பாடையில திரும்புறாளே !
பேரெடுத்த படிப்பெதுக்கு ?
கைநிறைய காசெதுக்கு ?

படிச்சு முடிச்சதுமே
கல்யாணம் பண்ணிக்கிட்டு ,
வீட்டோட இருந்ததெல்லாம் ,
உசுரோட சுத்தையில ,
ஊரு மெச்ச படிச்சுபுட்டு
லச்சரூவா மாசம் வாங்கி
கடைசியில வீட்டுக்கு
பொணமாத்தான் வாரதென்ன ?

பூவாட்டம் போன மக
புதருக்குள்ள சிதைஞ்சகத ,
உசுருருக்கி போகுரப்ப ,
விசாரண , போராட்டம்
ஒன்னுத்துக்கும் திராநியில்ல !
மனபாரம் தீரவில்ல !

ஊருக்கே பாரதிய ,
எடுத்துசொன்ன தமிழ்வாத்தி,
இன்னிக்கு சொல்லுறது
பத்திரமா வச்சுக்கங்க
பொட்டபுள்ளைய வீட்டுக்குள்ள !!!

மேலும்

vasanthanselvam - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 1:44 pm

சைக்கிளை மிதி
பைக்கை உதை
சுமக்கும் உன்னை!

மேலும்

பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 28-Jan-2014 1:22 pm
மறைபொருள் உணர்த்தும் உறைக்கும் உண்மை. நல்ல படைப்பு ! 27-Jan-2014 6:05 pm
vasanthanselvam - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 4:24 pm

என் கன்னம் கிள்ளி அம்மா சொல்வாள்
சொக்கத் தங்கம் என்று
உண்மை தானோ?
மாநகரப் பேருந்தில்
மடையன் ஒருவன் உரசிப் பார்த்தானே!

மேலும்

கோபத்தின் பதிவு ! நன்று. 27-Jan-2014 6:03 pm
vasanthanselvam - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 4:26 pm

மூன்றுமுடிச்சு கழுத்தில்போட்டு
மூவைந்து வருடமாச்சு
முத்தென்னுள் முகிழ்க்கவில்லை
மூடர்வார்த்தை தைத்திடுதே !

மூடுபனி என்வாழ்வை
மூடிவைத்த மாயமென்ன
மூப்புவந்து சேருமுன்னே
மூரலென்னுள் மலராதோ ?

வளைஅடுக்க வழியில்லை
வளைகாப்பு நடக்கவில்லை
பூச்சூடிப் பார்க்கவில்லை
பூயென்னுள் பூக்கவில்லை !

பனிக்குடம் உடைந்ததில்லை
பால்வடிந்து மணந்ததில்லை
பழிசுமந்து கிடந்திடவே
பாவமென்ன செய்தேனோ ?

சொத்துசுகம் இருந்தென்ன
சொர்க்கமே பிள்ளையன்றோ
தாய்மைவரம் வேண்டுகின்றேன்
தாயாகத் தவிக்கின்றேன் !

மார்பணைத்துப் பால்புகட்ட
மங்கைமனம் துடிக்கிறதே
மறலிவந்து கூப்பிடுமுன்
மழலைமடி நிரப்பாத

மேலும்

மிக்க நன்றி !! 31-Jan-2014 5:26 pm
சற்று கலங்கவே வைக்கிறது உங்கள் வரிகள் இது வரி அல்ல வலிகள் 31-Jan-2014 4:38 pm
மிகவும் நன்றி வதூத் ! 31-Jan-2014 8:44 am
தாய்மை தான் பெண்ணுக்கு பூரணம்.அந்த வலியையும் ஏக்கத்தையும் அடர்த்தியாகவும் எதார்த்தமாகவும் உணர்த்திருக்கிரீர்கள். முள்ளை முள்ளால் எடுத்திருக்கிறீர்கள் அல்லது முல்லை முல்லையால் சொல்லிருக்கிறீர்கள் ! நல்ல கவிதை! வாழ்த்துக்கள் ! 31-Jan-2014 8:39 am
vasanthanselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2014 11:19 pm

உன் பூமுகம்
பார்க்காத நேரங்களில்
ஏனோ அழகென்பதே
புவியில் அற்றுவிட்டதாய்
தோன்றுகின்றது !

மேலும்

vasanthanselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2014 11:11 pm

உன்னிடம்
கடன் வாங்கி
ஒளி வீசும்
பகல் நிலா
ஏனோ என்
கண்களுக்கு மட்டுமே
தெரிகிறது போடி !

மேலும்

vasanthanselvam - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2014 11:04 pm

நீ விடைபெற்று
செல்கையில்,
இந்த உலகமும்
உன்னோடு வந்துவிட்டது
என்னைத் தனியே விட்டு !

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே