வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்

வேலைக்கு போன மக
பாடையில திரும்புறாளே !
பேரெடுத்த படிப்பெதுக்கு ?
கைநிறைய காசெதுக்கு ?

படிச்சு முடிச்சதுமே
கல்யாணம் பண்ணிக்கிட்டு ,
வீட்டோட இருந்ததெல்லாம் ,
உசுரோட சுத்தையில ,
ஊரு மெச்ச படிச்சுபுட்டு
லச்சரூவா மாசம் வாங்கி
கடைசியில வீட்டுக்கு
பொணமாத்தான் வாரதென்ன ?

பூவாட்டம் போன மக
புதருக்குள்ள சிதைஞ்சகத ,
உசுருருக்கி போகுரப்ப ,
விசாரண , போராட்டம்
ஒன்னுத்துக்கும் திராநியில்ல !
மனபாரம் தீரவில்ல !

ஊருக்கே பாரதிய ,
எடுத்துசொன்ன தமிழ்வாத்தி,
இன்னிக்கு சொல்லுறது
பத்திரமா வச்சுக்கங்க
பொட்டபுள்ளைய வீட்டுக்குள்ள !!!

எழுதியவர் : vasanthanselvam (3-Mar-14, 5:20 pm)
சேர்த்தது : vasanthanselvam
பார்வை : 462

மேலே