சிந்தனைப் பொழில்

சிந்தனைகள்
வண்ணச் சிறகுகளானால்
எண்ணங்கள் நீலவானில்
வட்டமிடும்

சிந்தனைகள்
வானவில்லின் நிறங்களானால்
கவிதை ஓடைகள்
நெஞ்சில் துள்ளி வரும்

சிந்தனைகள்
காதல் சிறகு பெற்றால்
மாலைப் பொழுதினைப்
பாடித் திரியும்

சிந்தனைகள்
தத்துவ அர்த்தங்கலானால்
ஆழ் மனத்தில் அவை
அமைதி கொள்ளும்

சிந்தனையே
மௌனம் ஆகிவிட்டால்
நிச்சலனமான மனப் பொழிலில்
அலையின்றி அனைத்தும் அடங்கிவிடும்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Mar-14, 5:28 pm)
பார்வை : 110

மேலே