எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்மை போற்றுவோம்  (மகளிர்  தினக் கவிதை) 

 சமுதாயத்தால் ஏற்க
மறுக்கின்ற வாழ்நாள் 
உயிர் சரித்திரம் - பெண் ...

உடலால் மென்மையாக 
உள்ளதால் உலகினை வெல்லும்
ஆற்றல் வளத்திரன் 
பெற்ற மலர் - பெண் ...

இன்றைய காவியங்கள் 
பாட மறுக்கின்ற 
தியாகச்சுடர் - பெண் ...

ஆண் ஆதிக்க 
அடிமைத் தலையிலிருந்து 
மீண்டுவரத் துடிக்கும் 
வீட்டில் பூச்சி - பெண் ...

இதயத்தில் வைத்து 
போற்ற வேண்டிய கவிதையைக்
கவர்ச்சிப் பொருளாக்கிய 
சமூகம் - பெண் ...

பிரம்மன் படைத்த படைப்பிலேயே 
கடினப்பட்டு  உருவாக்கிய 
உன்னதப் படைப்பு - பெண் ...

தன் பலவீனத்தை 
பலமாக்கி 
சங்கடங்களை புதைத்து 
சாதிக்க துடிக்கும் 
விடியல்கள் - பெண் ...

ஆண்களின் 
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக 
மாற்றி தோள்கொடுத்து 
உயர்த்தும் 
கானல் நீர் - பெண் ...

உலக மொழிகளில் 
தேடினாலும் இணையாக 
உவமைக் கிடைக்காத 
உயர்திணை - பெண் ...
  
அன்னையாக 
சகோதரியாக 
தோழியாக 
காதலியாக
மனைவியாக 
மகளாக - என
அனைத்து உறவிலும் 
நிழல் மறைவில் நின்று 
ஒவ்வொரு ஆணையும்
வெற்றியாளனாக உருவாக்கும் 
உன்னதமான பெண்மையை 
போற்றுவோம் ...!
வணங்குவோம் ...!

த. சங்கரன் 
உதவிப் பேராசிரியர் ,
தமிழ்த்துறை,
ஏ.வி .எஸ்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
சேலம் . 

மேலும்


மேலே