கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்- கருத்துகள்

வாசிப்பை நேசிப்போம்.....

அகரம் முதலே னகரம் ஈறாக
ஆழப் படித்த மாந்தர் கூட
இச்சை கொண்டு படிப்பது இல்லை
ஈண்டு காணும் நூல்களை எல்லாம்
உயர்ந்த வாழ்க்கை வேண்டும் என்றும்
ஊரில் உயர்வாய் இருக்க வேண்டியும்
எண்ணம் கொண்ட யாவரும் கூட
ஐயமின்றி நூல்களை வாசிப்பது இல்லை
ஒல்லும் வகையான் நூல்களை என்றும்
ஓய்வின்றி நேசித்து வாசித்தாலே நாளும்
ஔவை போலே வாழ்ந்து மகிழலாம்......

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207
9842712109


கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே