பவீரக்குமார்- கருத்துகள்

கீழடி தொன்மை
−−−−−−−−−−−−−−−−
பண்டையர் குலமாகப் பாரினில் தோன்றி//
பண்புள்ள குலமாகப் பாரினை உயர்த்தி//
எங்கெங்கும் எச்சத்தை மிச்சமாகத் தூவி//
எதிரிகள் இல்லாத நல்வழி புகுத்தி//
உலகின் முதலாய் மூலத்தின் வடிவாய்//
வாழ்ந்த குலமே எங்கள் குலம்//
எண்ணாயிர ஆண்டுக்கு முன்னேக் கல்வியிலுயர்ந்து//
சங்கங்கள் வைத்து தமிழைப் போற்றியகுடி//
செம்பினில் கலங்களைச் செய்து வாழ்ந்தகுடி//
பெண்ணுக்கு சரிநிகர் பகன்றப்பண் ணேற்றுக்குடி//
மட்கலத்துள் மக்காத்தன்மை அறிந்த மங்களக்குடி//
இறைவனால் ஆண்டு, இறைவனைச் சமைத்தகுடி//
நாகரீகத்தின் உண்மை எதுவெனச் சொன்னகுடி//
வைத்திய, தத்துவ, அறிவியலை அறிந்தகுடி//
சாட்சியாய் உலகுதரும் தொல்லியல் ஆய்வின்வழி//
கீழடிபோல் உலகம் முழுதும் வாழ்ந்தகுடி......
−−− ப.வீரக்குமார், திருச்சுழி.

கார்+ முகில், போர்+மேகம், தேர்+ ஓட்டம்,
பூ+ தமிழ், கயல்+ விழி, கயல் + கன்னி,
முத்து+ இதழ், முத்தம்+ இதழ், அரசு+இயல்.
மொத்தம் ஒன்பது சொற்கள் மட்டுமே உள்ளன.

அழகைக் கூட்டும், பொன்
ஆபரணம்,
அணிந்த மலருக்கும் வாசம் காட்டும்
பூவையின் வருணனை பூமியின் வடிவினை,
கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும்,
மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க,
மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற,
வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து,
புருவக் கணையால் துளைக்கும் அரும்பு,
மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ,
ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ!
அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா,
மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ!
பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே!
சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே!
வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா!
மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா!
நீவைகை அணைக்கட்டா! நான் தேடும் மதுரையோ!
பகலில் வரும் நிலாநீ,
இரவினில் சுற்றும் சூரியன் நான்!
ஊரை வசியம் பண்ணும் ஊர்வசி
ஊஞ்சலாக்கினாய் ஏன் என் மனதை
ஆடிஆடி களைப்பாக வில்லையா பூங்கொடி...


−−−ப.வீரக்குமார், திருச்சுழி


பவீரக்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே