Arunachalam kumar- கருத்துகள்

கொரானா வரிகள்

ஆட்டி வைத்தேன் மானிட இனத்தை ஆட்டி வைத்தேன்

ஆறறிவு ஆணவத்தை அடக்கி வைத்தேன் நான் அடக்கி வைத்தேன்

உண்ணலும் உரங்கலும் என முடக்கி வைத்தேன் நான் முடக்கி வைத்தேன்

சட்டத்தையும் திட்டத்தையும் வட்டம் போட வைத்தேன் என்னை வட்டம் போட வைத்தேன்

கீழ் மக்களையும் அச்சுறுத்தினேன் இங்கிலாந்து பிரதமரையும் அச்சுறுத்தினேன் நான் அச்சுறுத்தினேன்
கொடை வள்ளல், கவசத்தோடு பிறந்த கர்ணனே அநியாயத்தின் பக்கம் இருந்ததால் வீழ்த்தப்பட்டான். ஆகவே முக கவசம் மட்டுமல்ல அக கவசமும் தேவை என எடுத்துரைப்பேன் நான் எடுத்துரைப்பேன்பேரிடர் வரதா புயல்,மழை வெள்ளம், சுனாமி போன்ற காலங்களில் வீதியிலும், மொட்டை மாடியிலும் உயிர் வாழ உணவு பொட்டலத்துக்காக ஏங்கி காத்திருந்த மக்களுக்கு விவசாயம்தான் முதன்மை தேவை என உணர்த்தி வைப்பேன் நான் உணர்த்தி வைப்பேன்

விழித்திரு தனித்திரு வீட்டுக்கள்ளேயே இரு என்பது மட்டுமல்ல
"அன்பாய் இரு"
"பண்பாய் இரு"
"ஒழுக்கமாய் இரு"
என்று சொல்லி முடிக்கிறேன்

வந்தவனுக்கு இருந்துச்சாம் சேர்த்தவனுக்கு சேர்ந்துச்சாம்
வந்தவனையும் சேர்த்தவனையும்
அடைச்சுசாம் தனிமையில் அடைச்சுசாம் இந்த கொலைகார கொரானா

கஷ்டத்தக்கு கடல் கடந்து போனானோ
இஷ்டத்துக்கு இடம் மாறி போனானோ
பெருமை பட்ட சொந்தங்களை எல்லாம்
பெரும் சீரளிவுக்கு கொண்டு சேர்த்தானோ

பிஞ்சி குழந்தைகளை கொஞ்சி முத்தமிட அஞ்சிடுவானோ
வந்தவன் அஞ்சிடுவானோ

மடிந்தவர்களுக்காக மணங்களங்கிடுமோ சொந்தங்கள்
மரணம் நம்மையும் நெருங்கிடும்
என மணங்களங்கிடுமோ

மடிந்து போய்விடு கொரானாவே நீ
மனிதனை விட்டு மடிந்து போய்விடு

பிரபலங்கள் எல்லாம் விழித்திரு தனித்திரு வீட்டுக்குள்ளே இரு என்கிறார்கள் நாங்களும் ஏற்றுகொண்டோம்

இறைவா நீ என்ன சொல்கிறாய்
வீதியில் வந்தால் விதி முடிந்திடுமா

மனசெல்லாம் பழுதுபட்டு மௌனமாய் கதறுகிறது என் நிழல் என் கூட இருக்கிறதா தெரியவில்லை

சட்டம் இயற்றும் சட்டமன்றத்தில் கூட வெளிநடப்பு போராட்டம்தான்
எங்களுக்கு உள்ளிருப்பு போராட்டமா

இரவென்றும் பகலென்றும் ஏன் படைத்தாய்

நாலுகால் மிருகம் எல்லாம் நாலாபுறமும் சுதந்திரமாய் சுத்தி திரிகிறது

மனிதனை மட்டும் வீட்டுக்குள்ளே இருத்தி வைத்திருக்கிறாய் ஏன்

அஞ்சுகிற நிலை மாறி ஆறுதல் பெறுவது எப்போது இறைவா...

நடந்து செல்லும் கால்கள் எல்லாம்
அளந்து கட்டிய வீட்டை விட்டு
கடந்து வெளியே செல்ல தவிக்கிறது

பட்டி தொட்டியெல்லாம் வண்ணங்ளாய் கண்டு கழித்த கண்கள்
எட்டு திக்கும் சுவர்களால் கட்டி வைத்த கண்களாய்
வழியை தேடி விழிகள் அசைக்கிறது

மருத்துவ அறிவாளர்கள் அறியா சவாலாக கொரானா

வெளி நாட்டிலிருந்து வந்தாயே
வெளி செல்லாமல் தடுத்தாயே
அச்சம் கொள்ள வைத்தாயே
அடங்கி இருக்க வைத்தாயே
புதுசா வந்த வைரசா
தினுசா வந்த எமனா
மஞ்சள் பூசவா
மருதானி பூசவா
வேப்பச்சாரு தெளிக்கவா
மாட்டுசானம் தெளிக்கவா
எங்கள் கிருமி நாசினி
மீறி நாசிக்குள் நுளைந்தால்
மார்கண்டேயனை பாதுகாத்தவன் எங்களையும் பாருலக மக்களையும் பாதுகாப்பான்

நிலவின் தாய்மொழி ஊரெல்லாம் பிரகாசிக்கும்
தமிழன் தாய்மொழி உள்ளுர ருசிக்கும்

குளவானில் பூத்த நிலா

காடுகளின் மரங்கள் தேவையுல்லதும் தேவையில்லாததும் வளரும்

தோப்பில் உள்ள செடிகளும் மரங்களும் நமக்கு தேவையானதும் விற்பனைக்கு தேவையாணதும் வளர்ப்போம்

வீட்டில் உள்ள செடி மரங்கள் நமக்கு மிக மிக தேவையானதும் மருத்துவ குணமுள்ளதையுமே வளர்ப்போம் அப்படி இருக்க

சமூக ஊடகங்கள் எப்படி இருப்பினும் உன் கையில் உள்ள கைபேசியில் உள்ள ஊடகத்தை உனக்கு மிக மிக தேவையானதை மட்டுமல்லவா உபயோக பயன்படுத்த வேண்டும்


Arunachalam kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே