Mohansundari- கருத்துகள்
Mohansundari கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [35]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [10]
புளியமரம்
பத்தாம் வகுப்பு
படித்தேன்
பதவியொன்றை
பிடித்தேன்
புளியமர
வேர் என்னை
வேந்தனாக்கி கொண்டது
விக்ரமாதித்தன்
அரியணைப்போல
வேர் எனக்கொரு
அரியணை ஆனது
அன்றாடம்
பார்த்த மரம்
அடிக்கடி என்னை
ஈர்த்த மரம்
பத்தாண்டு என்னோடு
கை குலுக்கிய மரம்
அமர்ந்து எழுந்ததாலே
என்னை
அரசனாக்கிய மரம்
எல்லோருக்கும்
பூ பிடிக்கும்
எனக்கோ
வேர் பிடிக்கும்
பள்ளிக்கூடம்
போகும் போதெல்லாம்
ஐந்து நிமிடமாவது
அமர்ந்து போ என அழைக்கும்
வாத்தியார் அடித்தால்
வம்பு செய்யும் மரம்
எது நடந்தாலும்
எனக்காய்
நடந்த மரம்
ஒன்றும் தெரியாத வயதிலே
என்மீது உயிர் வைத்த மரம்
கன்றுக்கு பசுவாய்
ஒருகாலத்தில் காத்த மரம்
மண்ணை விட்டு வெளியே
என்னை பார்க்கவே
எட்டிப்பார்த்தது அந்த
வேர்
புத்தகத்தை
தவற
விட்டிருக்கிறேன்
ஆனால்
தட்டை தவற
விட்டதில்லை
சின்ன வயதில்
படிப்பை விட
பசிதான்
அதிகமாய் இருந்தது
அரசு பள்ளியில் படித்த
அனைவருக்குமே
அந்த மரத்தோடு
அதிகம் பேசுவேன்
சின்ன வயதிலே
பெரிய நண்பன்
எனக்கந்த
பெரிய புளியமரம்
ராஜா
இருக்கைப்போலவே
இருக்கும்
அந்த வேர்கள்
அமர்ந்து விடுவேன்
ஆனால்
ராஜாப்போல
நான்
இருந்ததில்லை
ஆனாலும்
நான்தான் ராஜா
அந்த வேர்
அப்படிதான்
என்னை ஏற்கும்
சுற்றிலும்
நிறைய மரங்கள்
நின்றுக்கொண்டிருக்கும்
நான் அமர்ந்ததும்
அமருங்கள் அமருங்கள்
என்பேன்
நான்
அதிகம் பேசியது
யாரோடு
அந்த மரத்தின்
வேரோடுதானே
நான்
பல்பம் பிடித்தப்போதே
என்னை பிடித்த மரம்
எழுந்ததும் கேட்கும்
ஏன் போகிறாய் என்று
என் அரசவையில்
யாருமில்லை
ஏனெனில்
என் ஊரில்
என்னோடு யாரும்
பத்தாம் வகுப்பு
படிக்கவில்லை
அடுத்த பள்ளியில் சேரும்வரை
அரசன் போல இருந்தேன்
வெளியூர் போனதால்
விலாசம் தொலைத்தேன்
நெடுஞ்சாலைதுறையில்
நேர்கனல் வந்தது
வேலை
கிடைத்தது
சாலையை அகலமாக்க
மரத்தை
சாகடிக்க சொன்னார்கள்
என் வேர்களில் அமர்ந்து
ஆணையிட்டேன்
விட்டுப்போ வேறுவழியில் என்று...
இப்போது
என் அரியணையில்
எல்லாம் இருக்கிறது
தள்ளிப்போன சாலையைவிட
தள்ளிப்போய் விட்டார்
வெகுதூரத்தில்
ராஜாவும்....
பெரிதாக ஒன்றும் நான் உனக்கு செய்யவில்லை
ஆயினும்
நீ
பெரிதாத என்னை மட்டுமே நினைப்பாய்!
நான்கு திசைகளைக்கூட
நான்
உனக்கு அதிகமாய்
காட்டியதில்லை
போதிய நேரமில்லாம்
நான்கு சுவர்களுக்குள்ளே
நான்
உன்னை பூட்டிவிடுகிறேன்....
பணிசெய்வது எளிது
பணிவிடை செய்வது அரிது
அரிதான செயலையே
நீ
அதிகமாய் செய்கிறாய்
எனக்கு!
ஊர் சுற்றும் காலத்தில்
நீ
என்னை மட்டுமே
சுற்றுகிறாய்!
சூடாக சமைத்து கொடுக்கிறாய்
அதை
அன்பாலே ஆற வைக்கிறாய்!
ஆசைகளை துறந்தவர்கள்
துறவியாகிறார்
நீயோ
மனைவியாகிவிட்டாய்
எனக்கு
அர்ப்பணிப்பின் அர்த்தமே
நீதான்
எந்தவொரு இன்ப அதிர்ச்சியும்
நான் கொடுத்ததில்லை
ஆனாலும்
என்னையே உன் இன்பமாய்
என்றும் பார்க்கிறாய் நீ
துன்பமென்றால் தொலைவில் போய்விடுவார்கள்
நீயோ
தாங்கி கொள்கிறாய்
வாங்கி கொள்கிறாய்
வாழ்ந்தும் விடுகிறாய்
இலைகளை உதிர்க்காமல்
எந்த மரமும்
வளர்ந்து விடுவதில்லை
என்கிறாய்
பிள்ளைகளை வளர்ப்பதே
பெரிய செயல்
அதில்
நீ மட்டும் எப்படி
என்னையும் வளர்த்து விடுகிறாய்!
அருகில் இருந்தாலும்
கொஞ்சம்
தொலைவில் வைத்துத்தான்
பார்க்கிறேன்
உன்னை
நீயோ
வைத்து பார்க்கும் என்னையே
வளர்த்து பார்த்து
வாயடைக்கும் வகையில் வியப்பளிக்கிறாய்
என் குறுந்தொகையை விட
என் குறுநகையைதானே
நீ கேட்கிறாய்!
உன்
கைவண்ணத்தில்
படைக்கும்
ஒவ்வொன்றிலும்
ஆயிரம்
வண்ணம் பார்க்கிறேன்
நான்
என் உள்ளங்கையில்
தலைவைத்து தூங்குவதிலே
உனக்கு
ஆயிரம் ஆனந்தம்
என்ன செய்வேன்
எழுதபிடித்த என் கைகளுக்கு
உன்னை
ஏந்திக்கொள்ள சில நேரங்களில்
தவறிவிடுகிறதே!
எனக்கு மட்டுமல்ல
என்
பே(னா)நாவிற்கும்
உன் முத்த சுவை தெரியுமே
வீட்டிற்குள்ளே
விருந்தோம்பல் செய்கிறாய்
பிள்ளைக்கு உணவளித்து
பிறகு
எனக்கு உணவளித்து
அதன் பிறகே
நீ
அடக்கி வைத்த பசிக்கு
உணவளிக்கிறாய்...
நீ
சங்க காலத்தில் பிறந்திருந்தால்
காப்பியம் யாவும்
நீயாகி இருப்பாய்
திருவள்ளுவனும்
காமத்து பாலையும்
அறத்துபாலாகவே எழுதியிருப்பான்
என்
பேனாமுனையின்
பிள்ளை நீ
உன்னையும் வளர்க்கிறேன்
ஒவ்வொரு எழுத்திலும்
இப்போதெல்லாம் நான்
உன்னை விட
இரண்டு பிள்ளைகளை
முதன்மையாக பார்க்கிறேன்
நீ
ஏன்
இப்போதும்
எப்போதும்
என்னையே மட்டுமே
முதன்மையாய் பார்க்கிறாய்...
நீ
யாரிடமும் என்னை
விட்டுகொடுத்ததே இல்லை
நான்
என்னிடமே
உன்னை
விட்டுக்கொடுத்து விடுகிறேனே...
என் விழியோடும்
என் மனதோடும்
தினம்தினம் தித்திக்கும்
பாசமான மனைவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
துளி விஷம் போல
துண்டு பீடி
தீக்குச்சி
எரிகிறது
சுவாசம் தந்த காடு
கரிக்காடாகி
ஒவ்வொராண்டும்
உலக காடுகள் தீக்குளிக்கின்றன
பீடி சிகரெட் தீக்குச்சி
இவைகளை
அணைத்திட தெரியாதவர்கள்
விளக்கணைத்து மனைவியை
அணைத்துக் கொள்கிறார்கள்
வீட்டிற்கு தீ வைத்தால்
வேதனைபடுகிறார்கள்
காட்டிற்கு தீ வைக்கிறார்கள்
கவலைபடாமலே
இரவில் வெளிச்சத்தை
எந்த காடும் கேட்பதில்லை
விலங்குகளின் சுதந்திரம் மீது
வேடர்கள் போர்தொடுக்கிறார்கள்
மரங்கள் மனுக்கொடுப்பதில்லை
இறந்தவைகளுக்கு நிவாரணம் கேட்பதில்லை
உன் எச்சமான சுவாசத்தை
எடுத்துக்கொண்டு
அற்புதமாக ஆனந்த சுவாசத்தை
கொடுக்கிறது
நன்றி கெட்டவர்கள்
எதிரியாக இல்லை
துரோகியாக இருக்கிறார்கள்
தீ வைத்தவனுக்கு
தீ வைத்தால் தெரியும்
ஒவ்வொரு மரமும்
உயிர்தான் என்று
பட்டுப்போன மரத்தையும்
விட்டுபோகா பாசபறவைகள்
தீயில் எரியும் போது
பறந்தவை எத்தனை
இறந்தவை எத்தனை
யார் அறிவரோ
தேனெடுக்க வைத்த தீயில்
மரம்
காயப்பட்டது
ஆனால்
கவலைப்படவில்லை
மரத்திற்கே தீவைத்து
காடெல்லாம் சாம்பலாகிறதே
அடர்ந்த காட்டை
அடக்கம் செய்த பாவிகளே
மூச்சிற்கு மாற்றுப்பொருள் கண்டுவிடில்
இந்த விஞ்ஞானம்
ஒரே நாளில்
உலக காடுகளை அழித்திடும்
அது வேண்டாம்
ஒவ்வொரு நொடியும் சுவாசிக்க வேண்டும்
மரம் நமக்கு வரம்
சில
மனிதர்களோ அதற்கு சாபம்
பூமியை
தேன்கூடென நினைத்து
தீவைத்துக்கொண்டே இருக்காதீர்
எரிவது நீங்களும்தான் நீங்கிட முடியாது
விளையாடும் மேகங்களே
இவ்வேதனை காண்பீரோ
அழைத்த வனம்
ஆகிறது ரணம்
பொழிந்து விடுங்கள்- தவறினால்
அழிந்து விடும்...