புற்கள்
மாடுகள் மேய்ந்தாலும்
மனிதர்கள் சாய்ந்தாலும்
வலியென்று சொல்லாமல்
வளர்ந்துக்கொண்டே இருக்கிறது
புற்கள்
தாலாட்டு பாடாத தாய்
புற்கள்
கணத்த துயரங்களையும்
தூக்கிவீசி லேசாக்கி விடுகிறது
மனதை
கடித்தாலும் கவலைப்படுவதில்லை
கால்
மிதித்தாலும் கவலைப்படுவதில்லை
யாவரையும் எளிதில் கவர்ந்திடும்
பூக்களை விட புற்கள்
புயலிலும் சாவதில்லை
வெள்ளத்தில் மூழ்கீனாலும்
வெயிலில் எட்டிபார்க்குகும்
புற்கள்
ஞானிகளிடம் செல்வதை விட
புல்வெளிக்கு சென்றுப்பார்
வெளிவரும் போது வெளிச்சம் கிடைக்கும்
குளத்தில் கல்லெறியும் குணமுண்டு சிலருக்கு
அதுவும் வேண்டாம் அமைதி தரும்
புற்கள்
சுமை இறக்கிவிடும்
பசுமைதான் புற்கள்
இமைக்கீழ் ஈரம் இருக்காது
எந்த வலியும் நிலைக்காது
மடியில் படுக்க வைத்து
மனதை தடவி கொடுத்து
புற்களைப்போலவே லேசாக்கி
புற்கள் உங்களை அனுப்பிவிடும்
அமைதியைத் தேடி ஆலயம் செல்வதை விட
புல்வெளியில் படுத்துப்பாருங்கள்
ஆனந்த அமைதி கிடைக்கும்
ஒற்றைத்தண்டில் உயிர்வைத்த புற்கள்
சலிக்காமல் வரவேற்கிறது
தன்னை மிதிக்கும் பாதங்களை
சாய்வு நாற்காலியில் சாயாதீர்
அது
ஓய்வின் ஒத்திகை அல்ல
சாவின் ஒத்திகை
புற்களின் மீது படுத்துவிடுங்கள்
அது
புத்துணர்ச்சி தரும்
போர்களம் இரத்தம் பார்க்கிறது
புல்வெளிதான் சுத்தம் செய்கிறது
யுத்தமே வேண்டாமென்று
புற்கள் மீது படுத்தால்
அநாதைக்கும் அன்னை கிடைக்கிறது
யாரும்
அநாதை இல்லையென்ற எண்ணமும் கிடைக்கிறது...