வழிகாட்டுவதில்லை

அதிகாலைப் பொழுது
ஆதவனை துணைக்கு தேடாமல்
நடை பயிற்சி—அப்பொழுது
ஒரு மனிதன் கைவண்டி
ஒன்றை இழுத்து சென்றான்
கூர்ந்து கவணித்ததில் அவன்
ஒரு கிரிமினல் கைதியாக
இருந்தவன்

களவுத் தொழிலை விட்டு
உழைக்க ஆரம்பித்தது
எனக்கு மகிழ்ச்சி என்றேன்,
அதற்கு அவன்
இந்தக் கைவண்டியையும்
திருடி தான் எடுத்து செல்கிறேன்
என்றான்
உண்மையோ, பொய்யோ!

பலமுறை தவறிழைத்தவர்கள்
பிறர் அவர்களைப்
பாராட்டுவதாக எண்ணி
தவறு செய்து பிழைக்கிறார்கள்,
திருடுகிறவர்களை
திருத்தமுடியாமல் ஒதுங்குகிறோம்
இல்லை உதவுகிறோம்,--முறையாக
வழிகாட்டுவதில்லை.

எழுதியவர் : கோ. கணபதி. (8-Sep-19, 6:32 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 52

மேலே